A high-yielding loquat tree even in barren lands!
எதையும் தாங்கும் தன்மை கொண்ட சீமை இலந்தையை கைவிடப்பட்ட நிலங்களில் கூட சாகுபடி செய்யலாம். பிரச்னைக்குரிய மண்ணிலும் நஷ்டம் தராது. பழ மரக்கன்றுகள் நடுவதற்கு மண்ணில் கார, அமில நிலை சமமாக இருப்பது நல்லது. மானாவாரிப்பகுதி பழங்களின் அரசன் என்று சொல்லப்படும் சீமை இலந்தைக்கு வறட்சி தாங்கும் சக்தி அதிகம்.
மண் சத்து (Soil nutrients)
மண் ஆழம் குறையாமல் இருக்க வேண்டும். நிலைத்து நீடித்து வரவு தர சரியான பயிரை நிபுணர்களின் கள ஆய்வுடன் தேர்வு செய்வது நல்லது. மண்ணின் அடிப்படை சத்து இருப்பு எவ்வளவு என்று ஆய்வு செய்து அதன் மின்கடத்தும் திறனை அளவிட வேண்டும். மின்கடத்து திறன் மிக அதிகமாக குறியீடு எண் 4-க்கு மேல் இருந்தால் வேறு பயிர்கள் வளராது. அந்த நிலம் சாகுபடிக்கு லாயக்கற்றது என கூறப்படும்.
சீமை இலந்தைப்பழ மரம் (Loquat tree )
சீமை இலந்தைப்பழ மரம் மட்டும் வறண்ட கோடையில் கூட இலைகளை குறைத்துக் கொண்டு, பின்னால் துளிர்த்து மகசூல் தரும் திறன் பெற்றது. கார அமில நிலைப்புள்ளி 8-க்கு மேல் இருந்தால் கூட அந்த மண்ணில் சாகுபடி செய்யலாம். அந்த மண்ணுக்கேற்ற மரவகை அல்லது பழவகை கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
வட்டப்பாத்தி அமைத்து சொட்டு நீர்ப்பாசனத்துடன் ஓரடி உயர வரப்பு எடுத்து மேட்டுப்பகுதியில் கன்றுகளை நட்டு மண்ணில் நீரை பாய்ச்ச வேண்டும். பயிரின் தேவைஅறிந்து அந்த அளவு மட்டுமே சொட்டு நீர்ப்பாசன முறையை செயல்படுத்தினால் சீமை இலந்தை பயிர் நல்ல லாபம் தரும்.
இளங்கோவன்
வேளாண்மை இணை இயக்குனர்
காஞ்சிபுரம்
98420 07125
மேலும் படிக்க