தமிழகத்தில் வேளாண் வணிகத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு வழங்குகிறது.
தமிழகத்தில் வேளாண் வணிகத்துறை விவசாயிகளுக்கு என்று தனியான அடையாள அட்டை வழங்கி இருக்கிறது. இது அவர்கள் விளைவித்த பொருட்களை எளிதில் விற்பனை செய்ய உதவும் எனக் கூறப்படுகிறது.
விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய இயலாமல், இடைத்தரகர்களை நம்பி நஷ்டதிற்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆகும். இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து இதை தடுக்கும் நோக்கில் புதிய முயற்சி அரசு தற்பொழுது எடுத்து இருக்கின்றது.
வேளாண் வணிகத்துறை விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதன் அடிப்படையில், விவசாயிகளுக்கு எனத் தனியான புதிய அடையாள அட்டை ஒன்றை வழங்கி இருக்கிறது. இந்த அட்டை மூலம் விவசாயிகள் தாங்கள் விளைவித்த விலை பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து லாபம் ஈட்டிக் கொள்ளலாம்எனக் கூறப்படுகிறது.
இதன் மூலம் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவசாயிகள் உழவர் சந்தையைப் பயன்படுத்துமாறு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
மேலும் படிக்க
5 மாதங்களுக்கு அந்துப்பூச்சி தாக்கப்பட்ட PDS அரிசிதான் கிடைக்கும்!
ஜவுளி, சில்லறை வணிகத் துறைகள் 12 மணி நேர வேலையால் பயனடையும்!