நெல்லில் இருந்து அரிசியாக மாற்றும் இயந்திரம் திருத்தணி அருகே பயன்படுத்தப்பட்டது. மேலும் இது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டது. இந்த இயந்திரம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அரிசி இயந்திரம் (Rice Machine)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த, வீரநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணினி பட்டதாரி விவசாயி கே.பி.சின்னிபிரசன்னா கூறியதாவது: எங்களுக்கு சொந்தமான நிலத்தில், பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்கிறேன். பாரம்பரிய நெல்லை சேதம் இல்லாமல் அரிசியாக மாற்றுவது, பல விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இந்நெல்லை பொறுத்தவரை, அரிசியாக மாற்றி விற்பனை செய்தால் மட்டுமே, விவசாயி நல்ல வருவாய் ஈட்ட முடியம்.
பெரும்பாலான விவசாயிகளுக்கு, பாரம்பரிய ரக நெல்லை அரிசியாக மாற்றும்போதும், அவற்றை இருப்பு வைக்கும்போதும் தான் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதாவது ஆலையில் நெல் அரைக்கும்போது பதமாக இல்லைஎன்றால் நொய்யாக மாறிவிடும். அரைத்து வீட்டில் வைத்து விற்பதற்குள் பூச்சிகள் வந்துவிடும். இதை தவிர்க்க, சந்தை விற்பனைக்கு ஏற்ப, இரண்டு, மூன்று நெல் மூட்டைகளை விவசாயிகள் எடுத்து சென்று அரைத்து கொள்வர்.
குறைந்த விலை (Low Cost)
சில அரிசி உரிமையாளர்கள் அரைத்து கொடுக்காமல், கூடுதல் நெல் மூட்டைகளோடு காத்திருக்கும் நிலை உள்ளது. விவசாயிகளின் தேவைக்கேற்ப சிறிய ரக இயந்திரங்களை வாங்கி, நெல்லைக் கொட்டி அரிசியாக மாற்றிக் கொள்ளலாம். இந்த இயந்திரம் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். தவிர, குறைந்த விலையில் நாங்களே நெல்லை அரைத்து கொடுக்கிறோம் என்று அவர் கூறினார்.
தொடர்புக்கு:
கே.பி.சின்னிபிரசன்னா
90800 84800
மேலும் படிக்க
பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: மானியத்துடன் நல்ல வருமானம்!
விவசாயிகளுக்கு டிராக்டர்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!