1. செய்திகள்

விவசாயிகளுக்கு டிராக்டர்: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

R. Balakrishnan
R. Balakrishnan
Tractor for Farmers

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4) தலைமைச் செயலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறையால் ரூ.22.34 கோடி செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள் மற்றும் 185 கொத்து கலப்பைகள் ஆகியவற்றை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் வகையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேளாண்மைத் துறைக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் தமிழக வரலாற்றில் முதல்முறையாக, விவசாய மக்களை அழைத்து, அவர்களது கருத்துகளைக் கேட்டறிந்து வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, உழவர்களின் நலன் காக்கும் வகையில் வேளாண்மைத் துறை என்ற பெயரினை வேளாண்மை - உழவர் நலத்துறை எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது.

டிராக்டர்கள் (Tractors)

2021-22ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில் “விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைக் குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டத்தை நடப்பாண்டில் மேலும் வலுப்படுத்துவதற்காக, 185 டிராக்டர்கள், 185 ரோட்டவேட்டர்கள், 185 கொத்துக் கலப்பைகள், 120 கேஜ் வீல்கள், நவீன முறையில் பூச்சி மருந்துகள் தெளிக்க 4 ட்ரோன்கள் ஆகியவை 23 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பின்படி தற்போது விவசாயிகள் உழவுப் பணிகள் மற்றும் இதர வேளாண் பணிகளை மேற்கொள்ள ரூ.22.89 கோடி மதிப்பீட்டில் டிராக்டர் மற்றும் இதர வேளாண் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக குறைந்த வாடகையில் வழங்கிடும் அடையாளமாக தமிழக முதல்வர் இன்று ரோட்டவேட்டர்கள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் மற்றும் கொத்து கலப்பைகள் பொருத்தப்பட்ட 25 டிராக்டர்கள் ஆகியவற்றை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் படிக்க

விமான நிலையம் அமைக்க நிலங்களை இழக்கும் விவசாயிகள்: வாழ்வாதாரம் காக்க வேண்டுகோள்!

பனை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்: மானியத்துடன் நல்ல வருமானம்!

English Summary: Tractor for farmers: CM Stalin started it! Published on: 04 August 2022, 01:33 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.