1.பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுரை - சிறப்பு பருவ பயிர்களுக்கான பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆட்சியர் செ.கார்மேகம் வெளியிட்ட அறிக்கை: எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில், விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் பிரதமர் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல், மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு தற்போழுது விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்யலாம். நடப்பாண்டு இப்கோ டோக்யோ பொதுக் காப்பீட்டு நிறுவனம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் 31 ஆம் தேதி வரை பயிர்காப்பீடு செய்ய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள், பொது சேவை மையங்களை அணுகலாம்.
2. மீனவர்களுக்கு 1000 நாட்டுப்படகுகள் 40 விழுக்காடு மானியத்தில் வழங்கப்படும் - தமிழக முதல்வர் இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் அறிவித்த 1,000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்கள் வழங்கும் திட்டம், ஒன்றிய அரசின் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பட யோஜனா திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என மாநில அரசு குறிப்பிட்டு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும், 2023-24 ஆம் நிதியாண்டில் மாநில அரசு நிதியின் கீழ், பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு 1000, எண்ணிக்கையிலான 28 குதிரைத்திறனுக்கு குறைவான இயந்திர சக்தியுடைய வெளிப்பொருத்தும் / உட்பொருத்தும் இயந்திரங்களை, இயந்திரம் ஒன்றின் விலை ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் 40 விழுக்காடு மானியத்தில் வழங்கிட, நிர்வாக ஒப்புதலும் மானியத் தொகையாக மொத்தம் ரூ.4.80 கோடி நிதி ஒப்பளிப்பும் அளித்து அரசு 21செப்டம்பர் 2023 அன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: Today's Agri News: PM Kisan AI Chatbot | இயற்கை இடர்பாடுகளால் ஏற்பட்ட இழப்புக்கு நிதி ஒதுக்கீடு!
3.தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 கிராம சபாக் கூட்டம் - தமிழ்நாடு முழுவதும் வரும் அக்டோபர் 2ம் தேதி கிராம சபாக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கிராம சபாக் கூட்டத்தில் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. செப். 27 அன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக, சென்னையில் உள்ள மடிப்பாக்கம், தரமணி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம். மதியம் 02.00 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்படும்.
5. காஞ்சிப்புரம் மாவட்டத்தின் செப்டம்பர் 2023 மாத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 29, 2023 அன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலை வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே, விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயன்பெற காஞ்சிப்புர மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அழைப்பு விடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க:
ட்ரோன் வாங்க 4லட்சம் மானியம்: வேளாண் அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு!
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: விண்ணப்பிக்க +2 தேர்ச்சி போதும்!