1. செய்திகள்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி: விண்ணப்பிக்க +2 தேர்ச்சி போதும்!

Deiva Bindhiya
Deiva Bindhiya
Diploma in Cooperative Management: +2 pass is enough to apply!

சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி (Diploma In Cooperative Management) தொடங்கப்படவுள்ளது.

இந்த ஆண்டு பயிற்சிக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் 13.09.2023 முதல் 22.09.2023 வரை www.tncuicm என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை விடுதலின்றி அனைத்து கலங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்ப கட்டணமாக ரூ.100/- இணையதளம் மூலம் செலுத்தி சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அலுவலக நாள் மற்றும் நேரத்தில் நேரில் அல்லது பதிவு அஞ்சல் மூலம் சமர்பிக்க வேண்டும்.

இப்பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி +2 தேர்ச்சி ஆகும் மற்றும் ஆகஸ்ட் 01, 2023 அன்று 17 வயது பூர்த்தி செய்து இருக்க வேண்டும். ஆண், பெண் இருபாலரும் சேரலாம். இருபாலருக்கும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீட்டின்படி சேர்க்கை மேற்கொள்ளப்படும். கூட்டுறவு பட்டயப் பயிற்சி ஒராண்டு 2 பருவ முறைகளாக (முதல் பருவம்/ 6 மாதம் / 5 பாடங்கள் + இரண்டாம் பருவம்/ 6மாதம் / 5 பாடங்கள்) நடத்தப்படும். இதற்கான பயிற்சிக் கட்டணம் மொத்தம் ரூ.18,750/- ஆகும்.

மேலும், விவரங்களுக்கு சென்னை கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண். 215 பிரகாசம் சாலை பிராட்வே சென்னை - 600 001 என்ற முகவரிலோ அல்லது 044 - 25360041 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என சென்னை மண்டல கூட்டுறவுச் சங்களின் கூடுதல் பதிவாளர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

+2 படிப்பு போதும் | Cold Storage அமைக்க 50% மானியம்

கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பு முக்கியத்துவம்:

கூட்டுறவு மேலாண்மை பட்டய படிப்பு, இன்றைய பொருளாதார நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது கூட்டுறவு நிறுவனங்களின் வெற்றிகரமான செயல்பாடு மற்றும் தலைமைத்துவத்திற்கு அவசியமான சிறப்பு அறிவு மற்றும் திறன்களை வளர்க்க உதவுகிறது. கூட்டுறவு நிறுவனங்கள் விவசாயம், நிதி, வீட்டுவசதி மற்றும் நுகர்வோர் சேவைகள் போன்ற துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன, சமூக வளர்ச்சி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கின்றன.

இந்த டிப்ளோமா பயிற்சி தனிநபர்கள் கூட்டுறவு கொள்கைகள், ஆளுகை கட்டமைப்புகள், நிதி மேலாண்மை மற்றும் கூட்டுறவு வணிகங்களுக்கு தனித்துவமான சந்தைப்படுத்தல் உத்திகளை புரிந்து கொள்ள உதவுகிறது. பட்டதாரிகள் கூட்டுறவு சங்கங்கள், கடன் சங்கங்கள், பரஸ்பர காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் பலவற்றிற்குள் வேலை செய்வதற்கு தயாராக உள்ளனர். மேலும், இது தொழில்முனைவோரை வளர்க்கிறது, தனிநபர்கள் தங்கள் கூட்டுறவு முயற்சிகளைத் தொடங்கவும் நிர்வகிக்கவும் அதிகாரம் அளிக்கிறது, இதன் மூலம் சமூகங்களுக்குள் தன்னம்பிக்கை மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எனவே, இந்நேரத்தில் இதற்கான பயிற்சி +2 தேர்ச்சி பெற்று சொந்தமாக தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு, இது நல்ல வாய்ப்பு.

மேலும் படிக்க:

Agri News: ஆடு வளர்ப்பு பயிற்சி முகாம் | மகளிர் உரிமைத் தொகை அப்டேட் | வாழையில் பூச்சி மேலாண்மை பயிற்சி

கால்நடை மருத்துவ முகாம் | கதிரடிக்கும் இயந்திரம் வாங்க 40% மானியம் | மஞ்சள் சாகுபடி குறித்த பயிற்சி!

English Summary: Diploma in Cooperative Management: +2 pass is enough to apply! Published on: 19 September 2023, 06:10 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.