புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யுமாறு, தன் மகனிடம் வலியுறுத்தும்படி, பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீரா பென்னுக்கு, பஞ்சாப் விவசாயி ஒருவர் கடிதம் எழுதி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை பஞ்சாய், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநில விவசாயிகள் ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 60-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி (Talks Failed)
இதனிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், விவசாயிகளுடன் இதுவரை 11 சுற்றுகளாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
விவசாயி கடிதம் (Farmer`s Letter)
இந்நிலையில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளில் ஒருவரான, பஞ்சாபின் பெரோஸ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்பீந்தர் சிங், பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென்னுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி, உங்கள் மகனும், பிரதமருமான நரேந்திர மோடியிடம் வலியுறுத்துமாறு, அவர் கோரியுள்ளார்.
கடிதத்தின் சாராம்சம் (The essence of the letter)
கனமான இதயத்துடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, உணவளிக்கும் விவசாயிகளாகிய நாங்கள் டெல்லி சாலையில் இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். இதன் காரணமாக, கடும் குளிரையுரில் துாங்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.
எனவே, புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி, தங்கள் மகனிடம் நீங்கள் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு, கடிதத்தில்கூறப்பட்டு உள்ளது.
மேலும் படிக்க...
டெல்லிக்குள் பிரம்மாண்ட பேரணி- 2 லட்சம் டிராக்டர்கள் பங்கேற்பு!
2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!
வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம் –ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!