1. விவசாய தகவல்கள்

வேளாண் சட்டங்களை மாநில அரசுகளுக்கு பரிந்துரையாக அளிக்கலாம் –ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Agriculture laws can be recommended to state governments - Zaki Vasudev insists!

Credit : Savukku

மத்திய அரசு வேளாண் சட்டங்களை நாடு முழுவதற்குமான சட்டமாக இல்லாமல் மாநிலங்களுக்கான ஒரு பரிந்துரையாக அளிக்கலாம் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது :

மதிப்பீடு தேவை (Evaluation required)

வேளாண் சட்டங்கள் பற்றிய விவசாயிகளின் ஐயம் குறித்து பகுதிவாரியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.

முன்னேறும் வழி (The way forward)

விவசாயிகளுடன் சேர்ந்து மாநில அரசு அவர்களது தேவைகளை ஆய்வுசெய்து கவனிக்க வேண்டும். கூட்டு முயற்சியே முன்னேறும் வழி.

விவசாய சட்டங்களில் எந்த விஷயம் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளை வருந்தச் செய்கிறது என்று எனக்கு தெளிவாக தெரியவில்லை. இங்கே (தமிழ்நாட்டில்) இருக்கக்கூடிய விவசாய சமூககத்தை சார்ந்த யாரையும் இந்த சட்டங்கள் பாதித்ததாக தெரியவில்லை. நான் பல விவசாயிகளுடன் பேசி இருக்கிறேன். அவர்கள் யாரும் அப்படி உணரவில்லை.

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில், அல்லது வெவ்வேறு மாநிலங்களில் குறிப்பிடத்தக்க சந்தேகங்கள் இருக்கலாம்.விவசாயிகள் சாலைகளில் அமர்ந்து கொண்டு இருப்பது மற்ற குடிமக்களுக்கு பெரும் சிரமங்களை ஏற்படுத்துவதுடன், அவர்களும் பெருத்த இன்னல்களுக்கு உள்ளாகின்றனர்.

பரிந்துரை செய்யலாம் (Can recommend)

மேலும் இந்த போராட்டம் முடிவில்லாமல் சென்று கொண்டிருப்பதால் அரசாங்கமும் சரிவர இயங்க முடியவில்லை.எனவேஇந்த சட்டங்களை நாட்டிற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு பரிந்துரையாக அளிக்கலாம்.

இந்த சட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும், என்ன மாதிரியான முதலீடுகள், எந்த வகையிலான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாகும் என்பதையும், தொடர் விநியோக சங்கிலிகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட உள்கட்டமைப்புகளை கொண்டு வரும் என்பதையும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு விவரிக்க வேண்டும்.

அவ்வாறு விவசாயத்தை கார்பரேட் நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் என்ற சந்தேகங்கள் இருந்தால், மாநிலங்கள் தேவையான சட்ட திருத்தங்களை செய்து இது போன்ற அம்சங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்.

மாநில அரசுகள் அம்மாநில விவசாயிகளுடன் கலந்து பேசி அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப திருத்தங்களை செய்து அமல்படுத்திக் கொள்ளலாம். அதுவே நாடு முன்னோக்கி செல்வதற்கான வழியாக நான் பார்க்கிறேன். இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

2024ம் ஆண்டு வரை போராடத் தயார் : விவசாய சங்கத்தினர் அறிவிப்பு!

குளிர்கால நோய்களில் இருந்துத் தப்பிக்க வேண்டுமா? இது மட்டும் போதும்!

சூரிய ஒளி மின்வேலி திட்டம்- மானியம் பெறுவது எப்படி?

English Summary: Agriculture laws can be recommended to state governments - Zaki Vasudev insists!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.