பால் மற்றும் அதை அடிப்படையாக கொண்ட பொருளில் கலப்படம் செய்வது சகஜமாகிவிட்டது. இப்போது அடுத்ததாக சமையல் எண்ணெய் மற்றும் வெல்லமாகும். அத்தியவாசியமாக தேவைப்படும் இப்பொருட்களிலும், கலப்படம் செய்யப்படுவதாக தெரிவந்துள்ளது.
நாடு முழுவதும் இருந்து 15 வகையான சமையல் எண்ணெய்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில், 24 சதவீதம் கூட தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை. அதாவது, தோல்வியடைந்துள்ளனர். அத்தகைய சூழ்நிலையில், எந்த எண்ணெயை சாப்பிடுவது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். சந்தையில் இருந்து வாங்குவீர்களா அல்லது கடுகை வாங்கி சக்கில் போட்டு நீங்களே எண்ணெய் எடுப்பீர்களா. தற்போது, சட்டம் கடுமையாக இல்லாததால் கலப்படம் செய்பவர்கள் ஆபாராதம் கட்டிவிட்டு எளிதில் வெளியே வந்துவிடுகிறார்கள்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஆதாரங்களின்படி, நான்கு பெருநகரங்கள் மற்றும் 587 மாவட்டங்களில் 4,461 சமையல் எண்ணெய் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இதில், 108 மாதிரிகள் கலப்படம் கொண்டதுமட்டுமில்லாமல், ஆபத்தான பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களும் கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறம், மொத்தம் 1,080 மாதிரிகள் தரமற்றவை என்று கண்டறியப்பட்டது.
வாடிக்கையாளர்கள் என்ன செய்வார்கள்? (What will consumers do now?)
FSSAI ஆதாரங்களின்படி, மொத்த மாதிரியில், தயாரிப்பு மட்டத்தில் செய்யப்பட்ட 572 கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த சமையல் எண்ணெய்களில் வைட்டமின்கள் ஏ மற்றும் டி இருப்பதாக விளம்பரம்படுத்தப்படுகிறது, ஆனால் இவை விசாரணையில் கண்டறியப்படவில்லை. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் 2020 ஆகஸ்ட் 25-27 க்கு இடையில் இந்த மாதிரிகளை எடுத்ததாகக் கூறப்பட்டது. தேங்காய் எண்ணெய், பாமாயில், கடுகு எண்ணெய், சோயாபீன், சூரியகாந்தி மற்றும் நிலக்கடலை எண்ணெய் போன்றவை இதில் அடங்கும். அத்தகைய சூழ்நிலையில், எந்த எண்ணெயை சாப்பிடுவது என்பதை இப்போது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இது எண்ணெய்-இன் நிலவரம், அடுத்து வெல்லம்.
வெல்லம் (Jaggery)
மறுபுறம், தமிழகத்தில் வெல்லத்தில் கலப்பட வழக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல், கரூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் கலப்படம் தொடர்பான 46 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. 2020-21ன் கீழ் மாநில அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, உணவுப் பொருட்கள் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகளும் (அபராதம் மட்டும் அடங்கும்) போதுமானதாகிவிட்டன. இதுபோன்ற 1800 குற்றவியல் மற்றும் 1583 சிவில் வழக்குகள் உள்ளன. உண்மை நிலவரப்படி, பெரும்பாலான கலப்பட வியபாரிகள் சிறைக்கே சென்றடைவதில்லை. ஏனெனில் அவர்கள், அபராதம் செலுத்தி வெளியில் வந்துவிடுகின்றனர்.
தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 2019 முதல் மார்ச் 2021 வரை 33 வெல்லம் மாதிரிகள் எடுக்கப்பட்டன. இவற்றில் 14 மாதிரிகள் தரநிலையில் வெற்றி காணப்பட்டதாகவும், 8 மாதிரிகள் தரநிலையில் தோல்வியுற்றதாகவும் கண்டறியப்பட்டது. இந்த 8 மாதிரிகள் உரிமையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளில், 3 மாதிரிகள் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டது. இரண்டு மாதிரிகள் தரமற்றவை என்றும், 3 மாதிரிகள் தவறான முத்திரை என்றும் கண்டறியப்பட்டது, குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க: