மத்திய அரசு வழங்கும் 6,000ரூபாயைப் பெற ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த இணைப்பைச் செய்யாதவர்களுக்கு அந்த நிதியுதவி கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் நலிவடைந்த விவசாயிகளின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கும்,
பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தினை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், விவசாயிகள் தங்களது ஆதார் எண் இணைப்பட்டிருக்கிறதா? என்பதைத் தெரிந்துகொள்ள திரையில் தோன்றும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Toll-Free Number: 18001155266
Helpline Number:155261
new helpline: 011-24300606, 0120-6025109
011-23381092 (Direct Help Line)
மேலும் படிக்க: PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!
2.விளைபொருட்கள் மதிப்புக்கூட்டும் இயந்திரத்திற்கு 40 % மானியம்
விவசாயிகள் உற்பத்தி செய்த சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணெய்வித்துக்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு சிறுதானிய சுத்திகரிப்பு, பயறு உடைத்தல், எண்டுணய் பிழிதல் போன்ற வகைகளில் மதிப்புக்கூட்டும் இயந்திரங்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீத மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலமாகவோ அல்லது திரையில் தோன்றும் இணையதளத்தின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு அருகிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.
மேலும் படிக்க: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கல்! தமிழக மக்களுக்கு ஜாக்பாட்.?
3.விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: தேதி மற்றும் இடம்
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நவம்பர் 2022 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 25 ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியராக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: PM Kisan அப்டேட் முதல் ரூ.30,000 மழை நிவாரணம் வரை!
4.பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம், சுமார் 10 இலட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சம்பா/தாளடி/ பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பதிவு செய்யாமல் விடுபட்ட விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கோரப்பட்டதற்கிணங்க, காப்பீட்டுக்கான கடைசி தேதியை நவம்பர் 21வரை நீட்டிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளினால், தமிழ்நாட்டில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டின் சம்பா/தாளடி /பிசானப் பருவ நெற்பயிரில் இதுவரை 23.83 இலட்சம் ஏக்கர் பரப்பளவு காப்பீடு செய்யப்பட்டு, சுமார் 10.94 இலட்சம் விவசாயிகள் பதிவு செய்யதுள்ளனர் என வேளாண் அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
5.காட்டற்றை சேலம் மாவட்டத்தில் உள்ள கரிய கோவில் அணையில் தேக்கி வைக்க நடவடிக்கை- அமைச்சர் கே.என்.நேரு
சேலம் மாவட்டம் கல்வராயன் மலையில் உருவாகும் காட்டாறு கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராபாளையத்திற்கு சென்று வந்த நிலையில், இந்த காட்டற்றை சேலம் மாவட்டத்தில் உள்ள கரிய கோவில் அணையில் தேக்கி வைக்க அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சரின் உத்தரவுப்படி ரூ.7.30 கோடி செலவில் காட்டாற்றை கரிய கோவில் அணைக்கு திருப்பும் வகையில், கைக்கான்வளவு நீர் தேக்க திட்டத்தை நவம்பர் 21 தொடங்கி வைத்தார், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு அவர்கள். இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயன்பெற உள்ளதை எண்ணி மகிழ்ச்சி அடைவதாகவும் அவர் தெரிவித்தார்.
6.மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி தமிழ் நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு
தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி மற்றும் மீனாட்சிபுரம் கிராமங்களிலுள்ள 193.215 ஹெக்டேர் பரப்பிலான பகுதியை அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரியத் தலமாக உயிரிய பன்முகச் சட்டம் 2002ன் கீழ் அறிவித்துள்ளளது. இது மாநிலத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாகும். இந்த அறிவிப்பு உள்ளூர் சமூகத்தின் பங்கேற்புடன் பல்லுயிர்ப் பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும். இந்த அறிவிக்கை, இப்பகுதியின் வளமான உயிரியல் மற்றும் வரலாற்றுக் களஞ்சியத்தைப் பாதுகாக்கவும் இது உதவும்.
7.விவசாய குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைப்பு
நவம்பர் 2022-ம் மாதம் நடைபெற இருந்த விவசாய குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களை முன்னிட்டு இம்மாதம் ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.
8.Startuptn மூலம் Agri Startup-களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: இன்றே விண்ணப்பிக்கவும்
விவசாயம் மற்றும் உணவுத் துறைகளில் விவசாயிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு ஆக்கப்பூர்வமான தொழில்நுட்ப தீர்வுகளை அடையாளம் காண தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றஉம் இன்னோவேஷன் மிஷன் Startuptn வியாழக்கிழை தமிழ்நாடு அக்ரி ஹேக்கத்தான் 2022ஐ அறிமுகப்படுத்தியது. இந்த அக்ரி ஹேக்கத்தான், முன்னரே தீர்மானிக்கப்பட்ட விவசாயப் பிரச்சனைகளைத் தீர்க்கக்கூடிய ஸ்டார்ட்அப்களைக் கண்டறிந்து வெகுமதி அளிக்கும், மேலும் வணிக ரீதியாக சாத்தியமான யோசனைகளைக் கொண்ட அத்தகைய ஸ்டார்ட்அப்களுக்கு ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் நிதியுதவி அளிக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது. மேலும் முழுமையான தகவலுக்கு கிரிஷி தமிழ் வலைத்தளத்தை காணவும்.
9.வானிலை தகவல்
இன்று மற்றும் நாளை வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை, மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
மேலும் படிக்க:
70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள்: Full List இதோ!
கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையம் நிறுவ ரூ.60 இலட்சம் மானியம்