1. விவசாய தகவல்கள்

PM Kisan புதிய அப்டேட் முதல் ரூ. 12,000 சாகுபடி மானியம் வரை!

Poonguzhali R
Poonguzhali R

PM-Kisan 13-வது தவணை குறித்து வெளியான புதிய அப்டேட், TNEB: 50,000 இலவச மின் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு,  Ration: ரேஷன் அட்டைதாடரர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பு! தகுதியற்றவர்களுக்கு ரேஷனை ரத்து செய்ய உத்தரவு, PM Kisan e-Kyc-ஐ புதுப்பிக்க நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள், Subsidy: கோக்கோ முந்திரி சாகுபடிக்கு ரூ. 12,000 மானியம் அறிவிப்பு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.

PM-Kisan 13-வது தவணை குறித்து வெளியான புதிய அப்டேட்!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13ஆவது தவணையில் 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் விடுவிக்கப்படும் எனத் தெரிகிறது. ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 12 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டின் முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், மூன்றாவது தவணைக்கான பணம் டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரையில் வரலாம். அதன்படி, பிஎம் கிசான் திட்டத்தின் 13வது தவணை டிசம்பர் மாதம் முதல் என்றுவேணாலும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க: குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கல்! தமிழக மக்களுக்கு ஜாக்பாட்.?

TNEB: 50,000 இலவச மின் இணைப்பு திட்டத்திற்கு விவசாயிகள் வரவேற்பு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த தடாகோவில் பகுதியில் இலவச மின் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டதற்கு விவசாயிகள் பெருமளவில் வரவேற்பினைத் தெரிவித்துள்ளனர். இவ்விழாவில் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்திருந்தார், தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதற்கட்டமாக 20,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணைகளை வழங்கப்பட்டன. இதில் கரூர், திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, ஈரோடு, சேலம்உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரம் விவசாயிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதுவரை 1.50 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மேலும் இது போன்ற பலன்களை பெற விவசாயிகள் அறிவிப்பு வந்தவுடன் உழவன் செயலியில் தங்களது பதிவினைச் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: பொங்கல் பரிசு ரூ.1000! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்!!

PM Kisan e-Kyc-ஐ புதுப்பிக்க நவம்பர் 30-ஆம் தேதி கடைசி நாள்!

பிரதம மந்திரி கிசான் நிதி திட்டத்தில் 13ஆம் தவணையிலிருந்து நிதித்தொகை தொடரந்து பெற நவம்பர் 30-க்குள் PM Kisan e-Kyc-ஐ புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. PM Kisan திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் பொது சேவை மையம் மூலம் தங்கள் KYC ஐ புதுப்பிக்க வேண்டும். விவசாயிகளின் eKYC புதுப்பிக்கப்பட்டால் மட்டுமே தவணைத் தொகையைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது. புதுப்பிக்க விரும்பும் விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையதள முகவரியில் தங்களது பதிவைப் புதுப்பிப்பு செய்யுங்கள். இது வரை செய்யாதிருப்பவர்கள் வரும் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க: 

TNEB: மின்சார அலுவலகங்களில் ஆதாரை இணைக்க சிறப்பு கவுண்டர்கள்!

PM-Kisan 13-வது தவணை- இந்த தேதியில் வருகிறது?

English Summary: PM Kisan New Update Up To Rs.12,000 Cultivation Subsidy! Published on: 13 November 2022, 02:50 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.