Farm Info

Thursday, 18 March 2021 02:32 PM , by: Daisy Rose Mary

தொழில்கள் பல உள்ளன. ஆணால் எல்லா தொழிலும் எல்லாருக்கும் நல்ல வாய்ப்பாக அமைவதில்லை. அந்ததந்த தொழிலில் அவரவல் காட்டும் முயற்சியும், உழைப்பும் நிச்சயம் அவர்களை பணக்காரர்களாக்கும். இயற்கை வேளாண் தொழில் தன்னை நம்பிய அனைவரையும் வெற்றியடையச் செய்கிறது. நீங்களும் விவசாயத்தில் வெற்றியடைய விரும்பினால் நாங்கள் உங்களுக்கு சில வெற்றிகரமான ஆலோசனைகளை வழங்குகிறோம்.

இந்த வேளாண் துறை வணீகத்தில் சிறந்து விளங்க, நிச்சயம் உங்களுக்கு சில தாவரங்களைப் பற்றியும், விவசாயம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். பிரதமர் மோடியும் இந்த எலுமிச்சை புல் சாகுபடியை ஊக்குவித்துள்ளார். இது மிகுந்த மருத்துவகுணம் நிறைந்தது. மேலும் சோப்பு மற்றும் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில், எலுமிச்சை புல் பயிரிடுவதன் மூலமும் நீங்கள் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும். இந்த பகுதியில் எலுமிச்சை புல் சாகுபடி பற்றி அனைத்தும் உங்களுக்காக தருகிறோம். மேலும், இந்த விவசாயத்தில் உங்களுக்கு உரங்கள் தேவையில்லை, காட்டு விலங்குகள் தாக்குதல் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை.

எலுமிச்சை புல் வளர்ப்பை எந்த சீசனில் தொடங்கலாம்?

பிப்ரவரி முதல் ஜூலை வரை இந்த எலுமிச்சை புல் வளர்ப்பை தொடங்கலாம். இதுவே இதற்கான சிறந்த காலம். ஒரு முறை விதைப்பதன் மூலம் குறைந்தது 6 - 7 முறை அறுவடை செய்யலாம். எலுமிச்சை புல் நடப்பட்ட சுமார் 3 - 5 மாதங்களுக்குப் பிறகு அறுவடை செய்யப்படும்.

எலுமிச்சை எண்ணெய் ரூ.1500/-

எண்ணெயைப் பிரித்தெடுப்பதில் எலுமிச்சை புல் பயன்படுத்தப்படுகிறது நீங்கள் அதை ஒரு சிறிய நிலப்பரப்பில் பயிரிட்டால், நீங்கள் சுமார் 3 - 5 லிட்டர் எண்ணெயைப் பெறலாம். இந்த புல்லின் ஒரு லிட்டர் எண்ணெயின் விலை சுமார் ரூ.1000- ரூ.1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

விளைச்சல் & தரம் அறிவது எப்படி?

உங்கள் எலுமிச்சை புல் நன்கு வளர்ந்துவிட்டதா? அறுவடைக்கு தயாரா என்பதை கண்டுபிடிக்க, நீங்கள் அதை உடைத்து வாசனை பார்க்க வேண்டும். அதில் ஒரு அறுமையான எலுமிச்சை வாசனை இருந்தால், உங்கள் எலுமிச்சை புல் சாகுபடி தயாராக உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

எலுமிச்சை புல் அறுவடை

எலுமிச்சை புல் விதைத்து 3-5 மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். நன்கு வளர்ந்த எலுமிச்சை புல்லை தரையில் இருந்து 5 முதல் 8 அங்குலங்கள் வரை வெட்டுங்கள். இரண்டாவது அறுவடையில், ஒரு கட்டுக்கு 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் எண்ணெய் வரை கிடைக்கும்.

 

இதற்கு எவ்வளவு செலவாகும்?

இந்த எலுமிச்சை புல் வேளாண்மை செய்ய சுமார் 30 - 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். இது தவிர, அதன் அறுவடைக்கு பிந்தைய வேலைகள் உட்பட. ஒரு முறை விதைப்பிற்கு நீங்கள் 3 அறுவடைகளை மேற்கொள்ளலாம் அதன் மூலம் நீங்கள் சுமார் 100- 150 லிட்டர் எண்ணெயை எளிதாகப் பெறலாம்.

எவ்வளவு சம்பாதிக்க முடியும்?

இந்த வழியில், எலுமிச்சை புல்லிலிருந்து ஒரு வருடத்தில் 1 லட்சம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். செலவுகளைக் கழித்த பிறகு, நீங்கள் ஒரு வருடத்தில் 70 ஆயிரம் முதல் 1.20 லட்சம் ரூபாய் வரை லாபம் சம்பாதிக்கலாம்

மேலும் படிக்க....

வேளாண் துறையில் நல்ல லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்கான சுய தொழில் வாய்ப்புகள்!

தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மலர் தோட்டம் உள்ளிட்ட பல சிறு தொழில்கள் குறித்து படிக்க..

வேளாண் துறையில் அதிக லாபம் பெற உதவும் சிறு தொழில்கள்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)