1. வாழ்வும் நலமும்

வேளாண் துறையில் நல்ல லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்கான சுய தொழில் வாய்ப்புகள்!

Daisy Rose Mary
Daisy Rose Mary
World of Farming
Credit By : Eluthu

எத்தனையோ தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும் வாழும் மனிதனுக்கு தேவையானது உணவு மட்டுமே. அந்த உணவைத் தருவது விவசாயமும் அதைச் சார்ந்த பண்ணைத் தொழில் மட்டுமே. வயலில் இறங்கி ஏர் பிடித்தால் மட்டுமே விவசாயம் அல்ல, அவை அல்லாமல் வீடுகளிலும் நம் தோட்டங்களிலும் சிறு சிறு முதலீட்டில் மேலாண்மை திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம்.

உங்களுக்கு விவசாயம் சார்ந்த தொழில் தொடங்க விருப்பம் இருந்தால் நீங்கள் இந்த நேரத்தை பயனுள்ளதாக மாற்றலாம். உங்கள் சிறு முதலீட்டை வைத்து விவசாயம் சார்ந்த சுய தொழிலை துவங்கலாம். குறைந்த மூதலீட்டில் அதிக லாபம் சம்பாதிக்கும் சில எழிய வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாய பண்ணை அமைக்கலாம் (Farming Business)

நியாயமான பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒருவர் விவசாய பண்ணையைத் தொடங்கலாம். ஆடு, மாடு கோழிகள் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, தோப்பு பராமரிப்பு என ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நல்ல லாபம் ஈட்டலாம். ஆடு மாடுகளில் இருந்து பால் விற்பனையும், கோழி மீன் வளர்ப்பில் இருந்து இறைச்சி விற்பனையும் செய்து அதிக வியாபாரம் செய்யலாம், தோட்டம் தொரவுகளில் இருந்து உள்ளூர் தேவைக்கேற்ப நீங்கள் பொருட்களை தயாரித்து உள்நாட்டில் விற்கலாம். தொலைதூர பகுதிகளுக்கு நீங்கள் விநியோக அமைப்புகள் மூலம் கூட விற்பனை செய்து வருமானம் ஈட்டலாம்.

இயற்கை உரம் தயாரிப்பு (Natural Fertilizer)

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் விவசாய தொழில்களில் இதுவும் ஒன்று, குறிப்பாக பெண்கள் இந்த தொழிலை வீடுகளிலேயே செய்யலாம். வீடுகளில் கிடைக்க்கூடிய வேளான் கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கலாம். இதற்கு பல பயிற்சி வகுப்புகள் வேளாண் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த மணோன்மனி என்பவர் இயற்கை உரய் தாயரிப்பு விற்பனை மற்றும் பயிற்சியும் அளித்து வருகிறார்.

Farmer
Credit By : Hindu Tamil

லாபம் தரும் மரங்களை வளர்க்கலாம் (Tree Planting)

நீங்கள் இந்த தொழிலை தேர்வு செய்பவர்களாக இருந்தால், உங்களுக்கு பொறுமை மிகவும் அவசியம். மற்ற பயிர்களைப்போல இரண்டு மாதத்தில் அறுவடை செய்ய முடியாது. அதனால் மிகவும் கவணமாக இந்த தொழிலை துவங்குவது நல்லது. நீண்டகால மரங்கள் மற்றும் குறுகிய கால மரங்கள் என இரண்டையும் வளர்பதால் வரும் காலங்களில் அதனை விற்று நல்ல லாபம் சம்பாதிக்கலாம். பழ மரங்கள் அன்றாட வருமானத்தைக் கொடுக்கக் கூடியவையாக இருக்கும்.

உலர்ந்த மலர்கள் (Dry Flowers Business)

மலர்கள் விரைவில் கெடும் பொருளாக இருப்பதால், இவற்றை நீண்ட நாட்கள் சாதாரண நிலையில் வைத்திருக்க இயலாது. இதனைக் கருத்தில் கொண்டு, தற்போது உலர் மலர்கள் உற்பத்தியும் பெருமளவில் செய்யப்பட்டு வருகின்றது. மலர்கள் நன்கு உலர்த்தி பின்னர் அவற்றிற்குத் தேவையான வண்ணங்கள் கொடுத்து அலங்கார மலர்களாக்கி, நீண்ட காலத்திற்கு அழகு குறையாமல் சேமித்து வைக்க இயலும்.

உலர்த்தப்பட்ட மலர்கள் அதன் இலைகள், தண்டுகள், காய்கள் போன்றவற்றை கொண்டு சென்டு வளையம், வாழ்த்து மடல், அலங்காரப் பொருட்கள் போன்ற பல்வேறு மதிப்புகூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதனை சிறிய அளவில் குடிசைத் தொழிலாகவோ அல்லது தொழிற்சாலை தொழிலாகவோ செய்யலாம்.

தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: மலர் அமைப்பு முறை

விவசாயம்
Credit By : Hindu Tamil

காய் கனி ஆங்காடி (Vegetables & Fruits shop) 

சிறு முதலீடு மூலம் இந்த தொழிலில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். நீங்கள் விவசாயம் சார்ந்த இடங்களில் வசிப்பவராக இருந்தால் உங்கள் பகுதியில் கிடைக்கும் காய், கனிகளை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து சேகரிப்பதன் மூலம் பழங்கள் மற்றும் காய்கறி வணிகத்தை ஏற்றுமதி செய்ய ஆரம்பிக்கலாம். தொலைபேசி உரையாடல், இணைய இணைப்பு கொண்ட கணினி போன்ற எளிதான தகவல்தொடர்பு வழிமுறைகளின் மூலம் இதைச் செய்யலாம்.

மருத்துவ மூலிகைகள் விவசாயம் (Herbal Farming)

வணிக மட்டத்தில் மருத்துவ மூலிகைகள் வளர்ப்பது மிகவும் இலாபகரமான விவசாய வணிக யோசனைகளில் ஒன்றாகவே இருந்து வருகிறது. நீங்கள் மூலிகைகள் பற்றி நல்ல அறிவைக் கொண்டிருந்தால், போதுமான நிலம் இருந்தால், நீங்கள் மருத்துவ மூலிகைகள் வளர்ப்பதைத் தொடங்கலாம். துளசி, தூதுவளை, அகத்தி என பல்வேறு மூலிகைகளை வளர்க்கலாம். சில வகை மருத்துவ மூலிகை வணிகத்தில் நீங்கள் உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து சில உரிமங்களை எடுக்க வேண்டியிருக்கலாம்.

தேனி வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மலர் தோட்டம் உள்ளிட்ட பல சிறு தொழில்கள் குறித்து படிக்க..

பெண்களே தொழில் தொடங்க விருப்பமா? - ரூ.2 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அள்ளித்தரும் அற்புதமான ஐந்து திட்டங்கள்!

English Summary: Want to make a good profit in agriculture? Here are your self-employment opportunities! Published on: 23 July 2020, 05:31 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.