
விவசாயக் கடன் தள்ளுபடி! அரசின் முக்கிய அறிவிப்பு, PM Kisan பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு, தமிழகத்தில் இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு, தாஜ்மஹால் ரோஜாக்கள் விற்பனை அதிகரித்துள்ளது, பட்ஜெட் 2023 எதிரொலி: தமிழக விவசாயிகள் போராட்டம், சிறப்புற நடந்த புதுச்சேரி வேளாண் விழா 2023, சிறுதானிய உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேளாண் துறை வேண்டுகோள் முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
மேலும் படிக்க: TNEB இலவச மின்சாரம்|உளுந்துக்கு 50% மானியம்|தாட்கோ பயிற்சி|தேங்காய் ஏலம்|வேலைவாய்ப்பு|தக்காளி சரிவு
1. விவசாயக் கடன் தள்ளுபடி! அரசின் முக்கிய அறிவிப்பு!
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் கடலூர் சாலையில் உள்ள AFT மைதானத்தில் வேளாண் விழா-2023 மற்றும் 33-வது மலர், காய், கனிக்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை அரசு தள்ளுபடி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
2. PM Kisan பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 13-வது தவணை விடுவிக்கப்பட உள்ள நிலையில், அதனைப் பெற சில விவசாயிகளுக்கு கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. நிலம் வைத்திருக்கும் நிறுவனங்கள், விவசாய குடும்பங்களை சேர்ந்த அரசமைப்பு பதவிகளில் இருப்போர், பணிக்காலத்தில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பென்சன் வாங்கும் ஓய்வூதியதாரர்கள், கடைசி மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியோர் ஆகியோருக்கு பிஎம் கிசான் பணம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பம்ப்செட் மானியம்|ஏக்கருக்கு ரூ.30000|பயிறுதினம்|உழவர் விருது|தக்காளி விலை|தங்கம் விலை|மேட்டூர் அணை
3. தமிழகத்தில் இலவச திருமணத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு
தமிழ் நாட்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற மார்ச் 3-ஆம் நாள் சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்தைத் துறைமுகம் தொகுதியில் நடத்த இருக்கிறார். விருப்பமுள்ள மணமக்கள் உரிய சான்றிதழ்களுடன் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை அணுகலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார். இந்த நிலையில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட கொளத்தூர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க. நகர், வில்லிவாக்கம், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த விருப்பமுள்ள மணமக்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 9840115857 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.
4. தாஜ்மஹால் ரோஜாக்கள் விற்பனை அதிகரித்துள்ளது!
காதலர் தினத்தின் வருகையை முன்னிட்டு கோயம்பேட்டில் விதவிதமான ரோஜாக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. அதிலும் குறிப்பாக, தாஜ்மஹால் ரக ரோஜா, ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா, என பல வகையான ரோஜா பூக்கள் குவிந்துள்ளன. இவற்றை வாங்க காதலர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வழக்கமாக, மார்க்கெட்டுக்கு 5 முதல் 7 டன் வரையிலான ரோஜாக்கள் கொண்டு வரப்படும். தற்பொழுது 10 டன் ரோஜா பூக்கள் கொண்டு வரப்பட்டு விற்பனையாகி வருகின்றன.
மேலும் படிக்க: PM Kisan அப்டேட்|மானியத்தில் கொப்பரை தேங்காய்|கருப்பட்டி விலை|மத்திய குழு ஆய்வு|ட்ரோன் தொழில்நுட்பம்
5. பட்ஜெட் 2023 எதிரொலி: தமிழக விவசாயிகள் போராட்டம்!
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழக விவசாய சங்கத்தினர், போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர். மத்திய அரசின், இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான எந்த புதிய சலுகைகளும் வெளியாகவில்லை. அதாவது, விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை பற்றிய அறிவிப்பு வெளியிடாதது, விவசாய இடுபொருளான உர மானியத்திற்கு கடந்த ஆண்டை விட 50 ஆயிரம் கோடி குறைவாக ஒதுக்கீடு செய்தது, உணவு மானியத்தை குறைத்தது போன்ற செயல்களை கண்டித்து திருவாடானை பகுதியைச் சார்ந்த விவசாய சங்கத்தினர், போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது போராட்டம் நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.
6. சிறப்புற நடந்த புதுச்சேரி வேளாண் விழா 2023
வேளாண் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட வேளாண் விழா 2023 இன் ஒரு பகுதியாக புதுச்சேரி, அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 30,000 மலர்ச்செடிகள் AFT மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டன. தேசிய தோட்டக்கலை வாரியம், இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப நிறுவனம், தஞ்சாவூர், கரும்பு ஆராய்ச்சி நிலையம், கடலூர், காய்கறி ஆராய்ச்சி நிலையம், பாலூர், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை நிறுவனம், வேளாண் துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் மற்ற புகழ்பெற்ற நிறுவனங்கள் விவசாயத்தின் சமீபத்திய முன்னேற்றங்களை வெளிப்படுத்த ஸ்டால்களை அமைத்திருந்தன.
மேலும் படிக்க: TNEB: 1000 யூனிட் இலவச மின்சாரம்|சுய தொழில் பென்சன்|டெல்டா பகுதி மழை|மீன் வளத் துறை|தினை உணவு
7. சிறுதானிய உணவுகளை அதிக அளவு எடுத்துக்கொள்ள வேளாண் துறை வேண்டுகோள்!
சிறுதானிய உணவுகளை பொது மக்கள் அதிகளவில் உண்ண வேண்டுமென வேளாண்மைத் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, பனிவரகு, குதிரைவாலி போன்ற சிறுதானியங்களின் சாகுபடிப் பரப்பை உயா்த்த மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொது மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதற்கான விழிப்புணா்வு பணிகளையும் பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து வேளாண்மைத் துறை மேற்கொண்டு வருகிறது. எனவே, சிறுதானிய உணவுகளைப் பொது மக்கள் அதிகளவில் உண்ண வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
8. இன்று தொடங்கியது மூன்று நாள் G20 மாநாடு!
ADM இன் முதல் நாளில், இந்தூரில் இன்று முதல் பிப்ரவரி 15 வரை மூன்று நாள் நிகழ்வு நடைபெற்று வருகிறது. G20 உறுப்பு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் சுமார் நூறு பிரதிநிதிகள், இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். மூன்று நாட்கள் நடைபெறும், இந்த மாநாட்டின் முதல் நாளான இன்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் சிறுதானியங்கள் மற்றும் அவற்றின் விலைமதிப்பற்ற உணவுப் பொருட்கள் முக்கிய பங்கு வகித்தது.
9. மேட்டூர் அணை நிலவரம்
இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.81 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1453 கன அடியிலிருந்து 1466 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.86 டி.எம்.சியாக இருக்கிறது.
மேலும் படிக்க
இவர்களுக்கெல்லாம் பிஎம் கிசான: ரூ.2000 வராது!
ரூ.10,000 மானியம்: 5ரம் விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்புசெட்டு வழங்கல்