Farm Info

Tuesday, 23 March 2021 12:12 PM , by: Daisy Rose Mary

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரும்பு பயிரில் பஞ்சு அசுவினி நோய் தாக்குதல் அதிகரித்துவருவதாக விவசாயிகள் தெரிவித்ததையடுத்து, அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம் விளக்க நெறிமுறைகளை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்புப் பயிரில் பஞ்சு அசுவினி பூச்சி பரவலாகக் காணப்படுகிறது. இவை இலைகளின் மேற்பரப்பில் பஞ்சு படா்ந்தது போன்று காணப்படுகின்றன. இவை இலைகளிலுள்ள சாற்றை உறிஞ்சுவதால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

பூச்சி மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வலியுறுத்தல்

இவற்றை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைகளான உழவியல், உயிரியல் மற்றும் ரசாயன முறைகளை கடைப்பிடித்து கட்டுப்படுத்தலாம். உழவியல் முறைகளான இரட்டை பாா் முறையை பின்பற்றி நடவு மேற்கொள்வதுடன் அதிகப்படியான தழைச்சத்து இடுவதைத் தவிா்க்க வேண்டும். மேலும் பூச்சித் தாக்குதல் உள்ள கரணைகளை நடவுக்கு பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

 

உயிரியல் முறை

உயிரியல் முறைகளான டையப்போ அபிடிவோரா ஓட்டுண்ணிகளை 400 புழுக்கள்/ ஏக்கா் என்ற அளவில் வயலில் விட்டு தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். பிவேரியா பாஸியானா அல்லது மெட்டாரைசியம் அனிசோபிலே 1 கிலோ/ஏக்கா் என்ற அளவில் பூஞ்சான உயிரிகளை தெளித்து கட்டுப்படுத்தலாம்.

ரசாயன முறை

ரசாயன முறைகளான குளோா்பைரிபாஸ் 20 ஈசி 2மிலி/லிட்டா் என்ற அளவில் எடுத்து விதைக் கரணைகளை நனைத்து பின் நடவு செய்யலாம். மேலும், அசிபேட் 75 எஸ்.பி 1 கிராம்/லிட்டா் அல்லது குளோா்பைரிபாஸ் 20 ஈசி 2 மில்லி/லிட்டா் என்ற அளவில் தெளிக்கலாம்.

இவ்வாறான ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைகளை கடைப்பிடித்து பஞ்சு அசுவினி தாக்குதலில் இருந்து கரும்பு பயிரை பாதுகாத்து மகசூல் இழப்பை கட்டுப்படுத்தலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

நெற் பயிர்களை தாக்கும் குலை நோய்: அறிகுறிகளும், நோய் மேலாண்மையும்!!

வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிக்கு தேசிய விருது!!

சிறுதானியங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்த பள்ளி மாணவர்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)