மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 May, 2022 5:52 PM IST
An Overview Of Indian Banks Providing Agricultural Credit

வங்கிகளின் தேசியமயமாக்கல் என்பது, வேளாண்மையை பிரதானத் தொழிலாகக் கொண்ட பல்வேறு தொழில்கள் சார்ந்த பொருளாதார மண்டலங்களுக்கு கடன்வசதி செய்து தருவதற்கான சிறந்த நடவடிக்கை, என்பது குறிப்பிடதக்கது. அந்த வகையில், எந்தெந்த திட்டத்தின் கீழ் வங்கிகள் கடன் வழங்குகின்றன என்பதை, இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஆற்றல் வாய்ந்த வளர்ந்துவரும் வேளாண் துறைக்கு, அதன் எல்லாவித வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்கு வங்கிகள் மூலம் போதுமான நிதி உதவி தேவைப்படுகிறது. 05 லிருந்து தொடங்கும் மூன்று வருடங்களுக்கு, வேளாண்துறைக்கான கடனை இரட்டிப்பாக்கும்படி, இந்த வங்கிகளை அரசு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடதக்கது. பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில், அரசு விவசாயத்திற்கு அளித்துள்ள சிறப்பு கவனம் மற்றும் நிதி ஒதிக்கீடு, இவற்றுடன் வங்கிகளால் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் பயன்களைப் பெறுவது, குறித்த விரிவான தகவல்களைப் பார்க்கலாம்.

ஆந்திரா வங்கி

  • ஆந்திர வங்கியின் கிசான் பச்சை அட்டை
  • தனிமனித விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு போன்ற திட்டங்கள்

பரோடா வங்கி

  • மானாவாரி விவசாயத்திற்கு பழைய டிராக்டர்களை வாங்குதல்.
  • வேளாண் மற்றும் கால்நடை இடுபொருட்கள் வழங்கும் முகவர்கள்/ விநியோகஸ்தர்கள்/ விற்பனையாளர்களுக்கான நடப்பு முதலீடு.
  • வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளுதல்.
  • தோட்டக்கலை வளர்ச்சி.
  • கறவை மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பட்டுப்புழு வளர்ப்பு போன்ற தொழிலில் ஈடுபட்டிருப்போருக்கு நடப்பு முதலீடு.
  • தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வேளாண் உபகரணங்கள், கருவிகள், உழவு மாடுகள் வாங்குவதற்ககும், நீர்ப்பசானவசதிகளை உருவாக்குவதற்குமான நிதி உதவி.

பாங்க் ஆப் இந்தியா

  • ஸ்டார் பூமீஹீன் கிஸான் அட்டை - கூட்டு முறையில் விவசாயம் செய்வோர், எழுத்தின் படி மற்றும் எழுத்து மூலமற்ற குத்தைதாரர்கள் ஆகியோருக்கான திட்டம்
  • கிஸான் சமாதான் அட்டை - பயிர் சாகுபடி மற்றும் அதை சார்ந்த இதர முதலீடுகள்
  • பி.ஓ.ஐ. ஷதாப்தி கிருஷி விகாஸ் அட்டை - விவசாயிகளுக்கான எந்நேரமும் எவ்விடத்திலுமான மின்னணு வங்கி அட்டை
  • வீரிய ஒட்டு விதை உற்பத்தி, பருத்தி ஆலை, சர்க்கரை ஆலை ஆகியவற்றிற்கு ஓப்பந்த வேளாண்மைக்கான நிதி உதவியாகும்.
  • சுய உதவிக்குழுக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிருக்கான சிறப்புத் திட்டங்கள்.
  • ஸ்டார் ஸ்வராஜ்கர் பிரஷிக்ஷன் சன்ஸ்தான்விவசாயிகளுக்கு தொழில்முனைவோர் பயிற்சி வழங்குவதற்கான ஒரு புதிய முயற்சி
  • பயிர்க் கடன்கள் - மூன்று லட்சம் வரை (வருடத்திற்கு ஏழு சதவீத வட்டியில்)
  • பிணை உத்தரவாதம்: 50000 ரூபாய் வரை, பிணை உத்தரவாதம் எதுவும் தேவையில்லை. ஆனால் 50000 ரூபாய்க்கு மேல், இந்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவுகள் கடைபிடிக்கப்படும்.

காலை உணவு திட்டம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு, ஆசிரியர்கள் மகிழ்ச்சி!

ஒரியண்டல் காமர்ஸ் வங்கி

 

  • ஓரியண்ட்ல் பச்சை அட்டைத் திட்டம்
  • வேளாண் கடன்களுக்கான ஒருங்கிணைந்த கடன் திட்டம்
  • குளிர்பதன அறைகள் / பண்டக சாலைகள் நிறுவுதல்
  • முகவர்களுக்கான நிதி உதவி
  • இந்திய ஸ்டேட் வங்கி
  • பயிர்க் கடன் திட்டம்
  • சொந்த நிலத்தில் தயாரித்தவற்றைப் பாதுகாத்துவைத்தல் மற்றும் அடுத்த பருவகாலத்திற்கான கடன்களைப் புதுப்பித்தல்.
  • கிஸான் கடன் அட்டை திட்டம்
  • நில மேம்பாட்டுத் திட்டம்
  • குறு நீர்ப்பாசனத் திட்டம்

மாடி தோட்டத்தில் ரோஜா செடி, சிறப்பாக வளர டிப்ஸ் இதோ!

  • ஒருங்கிணைந்த அறுவடைக்கான இயந்திரங்கள் வாங்குதல்
  • கிஸான் தங்க அட்டை திட்டம்
  • கிருஷி ப்ளஸ் திட்டம் - கிராமப்புற இளைஞர்களுக்கு தேவைக்கேற்ப்ப டிராக்டர்களை வாடகைக்கு எடுக்க
  • பிராய்லர் ப்ளஸ் திட்டம் - கோழி வளர்ப்பு
  • முன்னோடி வங்கித் திட்டம்

சிண்டிகேட் வங்கி

  • சிண்டிகேட் கிஸான் கடன் அட்டை
  • சூரிய அடுப்பு திட்டம்
  • வேளாண் ஆலோசனை மையம மற்றும் வேளாண் வியாரபார மையங்கள்
  • விஜயா வங்கி
  • சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள்
  • விஜயா கிஸான் அட்டை
  • விஜயா பிளான்டர்ஸ் அட்டை
  • கிராமத் தொழிற்சாலைகள் மற்றும் கைவினை கஞைர்களுக்கான கே.வி.ஐ.சி. திட்டம்

மேலும் படிக்க:

ICAR Recruitment: பட்டதாரிகள் கவனத்திற்கு, ரூ 44.000 சம்பளம்! விவரம் உள்ளே

Grafting Technique: ஒரே செடியில், உருளை கிழங்கு மற்றும் தக்காளி வளர்க்கலாம்!

English Summary: An Overview Of Indian Banks Providing Agricultural Credit
Published on: 16 May 2022, 05:51 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now