மேட்டூர் அணையில், நடப்பாண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்படும் என்று, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஜூன் 12ல் (On June 12th)
தமிழகத்தின் முக்கிய வேளாண் மாவட்டங்களான டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும், ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி 120 அடி கொண்ட மேட்டூர் அணையில் இருந்துத் திறக்கப்படும் நீரைக் கொண்டு, 4 லட்சம் ஏக்கரில் குறுவை, 13.10 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும்.
அணை திறப்பதில் சிக்கல் (Problem opening the dam)
ஆனால் சில ஆண்டுகளில் தேவையான அளவுத் தண்ணீர் அணையில் இல்லாத பட்சத்தில், தாமதமாக அணை திறக்கப்பட்டுள்ளது.
நீர் திறக்கும் வழிமுறை (Water opening mechanism)
பாசனத்துக்கு நீர் திறக்க, அணை நீர்மட்டம், 90 அடி, 52 டி.எம்.சி.,க்கு மேல் இருக்க வேண்டும். கடந்த ஆண்டு, 101 அடியாக இருந்தது. இதனால், 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்துத் தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போதைய நிலவரம் (Current situation)
நடப்பாண்டில் தற்போதைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 97.72 அடி. நீர் இருப்பு, 61.92 டி.எம்.சி.,யாக உள்ளது. நீர் திறக்க இன்னும், 29 நாள்கள் உள்ளன. தற்போது குடிநீருக்கு அணையில் இருந்து வினாடிக்கு, 800 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இதனால் ஜூன், 12க்குள் இருப்பு மேலும், 2 டி.எம்.சி., குறைய வாய்ப்புள்ளது. ஆனாலும், அன்றைய நாளிலும், குறைந்தபட்ச நீர் இருக்கும்.
அணையைத் திறக்க வாய்ப்பு (Opportunity to open the dam)
எனவே, இரண்டாவது முறையாக தொடர்ந்து, நடப்பாண்டிலும் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை பாசனத்துக்கு நீர் திறக்க அதிக வாய்ப்புள்ளதாக, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம் (Consultative meeting)
இதனிடையே, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகளிடம் கருத்துக்கேட்பு (Consultation with farmers)
பல்வேறு துறை அமைச்சர்கள் பங்கேற்றக் இக்கூட்டத்தில், நடப்பாண்டுப் பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது, தூர்வாருவது குறித்து விவசாயிகளிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
முதலமைச்சர் அறிவிப்பார் (The Chief Minister will announce)
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சந்திப்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "மேட்டூர் அணை திறப்பு குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான விவசாயிகள் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர். இக்கருத்துகளை எல்லாம் முதல்வரிடம் தெரிவிப்போம். அவர் முறையாக அறிவிப்பார்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மேலும் படிக்க...
விவசாயிகள் போராட்டம்: மே 26ம் தேதி கருப்பு தினமாக அனுசரிப்பு!
ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!