1. விவசாய தகவல்கள்

பாசன நீரையும் பரிசோதிக்கலாம்- தெரியுமா உங்களுக்கு?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
You can also test the irrigation water - you know?

Credit : Hindu Tamil

விவசாயிகளே, வெறும் 20 ரூபாய் கட்டணம் செலுத்தி பாசன நீரையும் பரிசோதிக்கலாம். இந்தப் பரிசோதனையைச் செய்வதன்மூலம் மண் சார்ந்த பல விஷயங்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு, அதற்கு ஏற்ப சாகுபடியைத் திவிரப்படுத்தலாம்.

பாசன நீர் பரிசோதனையின் அவசியம் (பாசன நீர் பரிசோதனையின் அவசியம்)

சிறந்த விவசாயத்திற்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் அவசியம்.

பயிரின் வளர்ச்சி (Crop growth)

பயிரின் வளர்ச்சிக்கு மண் பரிசோதனையைப் போல, நீர் பரிசோதனையும் அவசியமாகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும், பாசனத்திற்குப் பயன்படுத்தும் நீர் மோசமானதாக் இருந்தால், மண்ணில் பயிர்கள் பயிரிடத் தகுதியற்றதாக மாறிவிடும்.

பம்புசெட் கிணறு (Pumpset well)

பம்புசெட் உள்ள கிணற்றில் இருக்கும் நீரைப் பரிசோதிப்பதாக இருந்தால், மோட்டாரை ஒரு அரைமணி நேரம் ஓடவிட வேண்டும்.

நீர் சேகரிப்பு (Water collection)

ஒரு லிட்டர் பாட்டிலில் கிணற்றின் நடுவில் இருந்து எடுத்தத் தண்ணீர் நிரப்ப வேண்டும். சுத்தமான பாட்டியில் இதே தண்ணீரால் கழுவியப் பிறகு, தண்ணீரைப் பிடித்துப் பரிசோதிக்க வேண்டும்.

ஆழத்தில் உள்ள நீரை சேகரித்தல் (Collecting water at depth)

பம்புசெட் இல்லாத கிணற்றில், மேல்மட்ட நீரை எடுக்காமல், ஆழத்தில் உள்ள நீரை எடுத்து பாட்டிலில் சேகரிக்க வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

பாசன நீர் மாதிரியுடன் விவசாயியின் பெயர், முகவரி, சர்வே எண், பயிர் சாகுபடி, அலைபேசி எண் போன்ற விவரங்களுடன் மண் பரிசோதனைக்கூடம் அல்லது வேளாண் அறிவியல் மையத்தில் கொடுக்க வேண்டும்.

மிகக் குறைந்தக் கட்டணம் (Very low fee)

நீரில் உள்ள உவர் நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், சோடியம் குளோரைடு, சல்பேட் மற்றும் நீரின் கடினத்தன்மை, நீரின் ஈர்ப்பு விதம் ஆகியவை பரிசோதிக்கப்படுகிறது. இதற்குக் கட்டணம் ரூ.20 மட்டுமே.

தகவல்

சந்திரசேகரன்,

வேளாண் ஆலோசகர்,

அருப்புக்கோட்டை.

மேலும் படிக்க...

ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் வீட்டுத் தோட்டம் அமைக்க சூப்பர் டிப்ஸ்!

மண் வளம் பெருக்க உதவும் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி!

மண் இல்லாமல் தோட்டம் அமைக்க ஆலோசனை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த இஞ்சினியர்!

English Summary: You can also test the irrigation water - you know?

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.