Farm Info

Friday, 08 January 2021 06:51 PM , by: Elavarse Sivakumar

Credit : Padasalai

திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொங்கல் பானை உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், பானைத் தொழிலாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பெங்கல் பானை (Pot)

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் போது மண் பித்தளை பானைகளில் பொங்கலிடுவதுதான் தமிழர்களின் பாரம்பரிய வழக்கம்.

பொங்கல் கொண்டாட்டம் (Pongal Celebration)

புதிய அடுப்பில், புது மண் பானையில், புத்தரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை சேர்த்து சர்க்கரைப் பொங்கல் வைத்து சூரியனை வணங்கி பொங்கல் கொண்டாடுவார்கள்.
சாதாரண மண் பானைகளைப்போல் அல்லாமல், பொங்கல் பானைகள் கூடுதல் கவனத்துடன் தயாரிக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்காக, 1 கிலோ முதல் 5 கிலோ அரிசி வரை வேகும் அளவில் பானைகள் தயாரிக்கப்படுகின்றன.

பொங்கல் பானை தயாரிப்பு (Pongal pot preparation)

இதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் குறிச்சி, காருகுறிச்சி, மாவடி ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளில் பானைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.கார்த்திகை மாதம் 2ம் வாரத்திலிருந்து பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

பானைகள் ரூ. 70 முதல் ரூ.200 வரை பல்வேறு விலைகளிலும் தயாரிக்கப்படுகின்றன. வண்ணங்களுடன் கூடிய சீதனப் பானைகள் ரூ.700 வரை விற்பனையாகின்றன.பொங்கல் பானைகளை வாங்கும்போது மூன்று பக்கமும் சுண்டிப் பார்த்து வாங்க வேண்டும். அப்போது ஒரே மாதிரியான ஒலி வர வேண்டும். மேலும், பானையின் உள்புறமாக பார்த்தும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

ஜனவரி 1 முதல் 10 வரை பொங்கல் பானை உற்பத்தி அதிகளவில் இருக்கும். நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தாமதமாக பெய்துவருவதால் மண்பாண்டங்களைக் காய வைக்க முடியாத நிலை ஏற்பட்டு, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பிற மாநில விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று பானை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க...

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)