1. விவசாய தகவல்கள்

பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Earthenware to help celebrate Pongal enthusiastically - Intensive work in progress!

Credit: You Tube

மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்கோவில் மற்றும் சுந்தர்ராஜன் பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானைகள் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

தமிழர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்று பொங்கல். உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தைமாதம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நன்னாளில், புதிய மண்பானையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி,  திராட்சை, நெய் சேர்த்து பொங்கலிட்டு, சூரியனுக்கு படைத்து வழிபடுவது பாரம்பரியம்.

எனவே மாநிலம் முழுவதும் பொங்கல் பண்டிகையின்போது, மண்பானை விற்பனை களைகட்டுவது வழக்கம்.

மண்பானை தயாரிப்பு (Clay preparation)

இதனைக் கருத்தில்கொண்டு, மதுரை மாவட்டத்தில் அழகர் கோவில், சுந்தரராஜன் பட்டி உட்பட பல பகுதிகளில் மண்பானை தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தரும் வியாபாரிகள், மண்பானைகளை ஆர்வமுடன் கொள்முதல் செய்து செல்கின்றனர். எனினும், இந்த ஆண்டு கொரோனா மற்றும் தொடர் மழை காரணமாக பானை உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளது.

ரூ.30 விலையில் (Rate is Rs.30)

பொங்கலுக்காக புதியப் பானைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு செய்யப்படும் பானைகள் சுமார் ரூ30 ல் ரூ.300 வேரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றது.

குறிப்பாக மண் பானையில் செய்யப்படும் உணவுக்கு தனிச்சுவை இருந்தால், மண்பானைகளுக்கு எப்போதுமே மவுசுதான். எனவே பொதுமக்கள் அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

ஆனால் சீசன் காலங்களில் மட்டுமே மண்பானைகள் அதிகளவில்
விற்பனையாவதாகவும், பிற நாட்களில் குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவருவதாகவும் மண்பானை தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இதேபோல் கோவை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் மண்பானைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்க தயாராகி வருகின்றன.

மேலும் படிக்க...

டிராக்டருடன் கூடிய அறுவடை இயந்திரம்- விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் கிடைக்கும்!

PM-Kisan : 9 கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கில் -ரு.2000 - பிரதமர் மோடி விடுவித்தார்!

41லட்சம் பால் சங்கங்களுக்கு விரைவில் கடன் வழங்கப்படும்- முழு விபரம் உள்ளே!

English Summary: Earthenware to help celebrate Pongal enthusiastically - Intensive work in progress!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.