காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்பவர்கள், அங்ககச் தரச்சான்று பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் ப.காளியம்மாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
உணவுத் தேவை (Need for food)
பெருகி வரும் மக்கள் தொகையும் குறுகிவரும் விளைநிலங்களையும் கருத்தில் கொண்டு உணவுத் தேவையை பூர்த்தி செய்ய தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரசாயன இடுபொருட்களையும், உயர்விளைச்சல் தரும் ரகங்களையும் பயன்படுத்தி வருகிறோம்.
அங்ககச் சான்று (Organic proof)
நாம் நமது அடுத்த தலைமுறைக்கு மாசற்ற வேளாண் முறையை தருவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உணவுக்கும் வழிவகை செய்ய அங்ககச் சான்று பெறுவது மிகவும் அவசியமாகிறது.
தரச்சான்றிதழ் (Certification)
எனவே, விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளை பொருட்களுக்குத் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தரச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இயற்கைத் தன்மை (Naturalness)
இயற்கை முறையில் விளை விக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும்பொழுது அவற்றிற்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அதன் இயற்கைத் தன்மை உறுதி செய்யப்படுகிறது.
ஏற்றுமதி வாய்ப்பு (Export opportunity)
தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுகிறது. இந்த தரச்சான்றிதழ் மூலம் விளைவிக்கப்படும் அங்கக விளைபொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
குழுவாக (As a group)
அங்கக சான்றளிப்பிற்கு தனி நபராகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். பெரு வணிக நிறுவனங்களும் பதிவுசெய்து கொள்ளலாம். அங்கக விளைபொருட்களை பதன் செய்வோரும் வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்து கொள்ளலாம்.
கட்டணம் (Fee)
இதற்கான பதிவு கட்டணம் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.3,700 எனவும், குழுபதிவிற்கு ரூ.7,200 எனவும் இது நிறுவனங்களுக்கு ரூ.9,500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு (Contact)
விரிவான விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் 97909 11069, விதைச் சான்று அலுவலர் 86103 15248 என்ற தொலைப்பேசி எண்களிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இயற்கை விவசாயம் (organic farming)
நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு அங்கக வேளாண்மை அச்சாரம் என்பதுடன், இனிவரும் காலங்களில் நாம் உண்ணும் உணவே மருந்தாக அமைய இயற்கை விவசாயம் உதவிசெய்யும். எனவே காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் அனைவரும் அங்ககச்சான்று பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!