1. செய்திகள்

விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரே‌ஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

தொழிற்துறை மேம்பாடு, புதிய தொழில் வாய்ப்புகள், தகுதியானவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவரது உரையில் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சி அமைத்த பிறகு முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை கூடியது. இதில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். ஆளுநர் உரையில் கூறியிருப்பதாவது,

தொழிற்துறை மேம்பாடு

தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்பட வேண்டிய தொழில் வரியை செலுத்துவதற்கான கால அளவும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கோவிட் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை விரைவாக மீட்டெடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது.

சிறுகடன் பெற்றுள்ளவர்களுக்கு கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு முதல்-அமைச்சர் எடுத்துச் சென்றுள்ளார். தொழில் நிறுவனங்களின் பணியாளர்களால் செலுத்தப்பட வேண்டிய தொழில் வரியை செலுத்துவதற்கான கால அளவும் மூன்று மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில் வாய்ப்புகள்

சென்னை-கன்னியாகுமரி தொழில் பெருவழியிலும் சென்னை, பெங்களூரு தொழில் பெருவழியிலும் அமைந்துள்ள தொழில் வளர்ச்சி குறைவாக உள்ள வட மாவட்டங்களில், அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுக்கும்.

15 நாட்களுக்குள் ரேஷன் கார்டு

ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் விலையில்லா அரிசி தொடர்ந்து வழங்கப்படும். குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த அனைத்து நபர்களுக்கும் பதினைந்து நாட்களுக்குள் ‘ஸ்மார்ட் கார்ட்’ வழங்கப்படும்.

தடையின்றி மின்சாரம்

மாநிலத்திலுள்ள அனைத்து மின் நுகர்வோருக்கும் தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும்.
இவ்வாறு பல்வேறு தகவல்களையும், தமிழ்நாட்டின் புதிய திட்டங்களையும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையில் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

கொரோனாத் தொற்று, சிறுநீரகக் கோளாறை ஏற்படுத்தும் - மருத்துவர்கள் எச்சரிக்கை!

English Summary: People can get Ration card in next 15 days once it applied, Governor speech Published on: 22 June 2021, 11:04 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.