திருப்பத்தூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தில் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வட்டார வேளாண்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் ஜே.சி.ராகினி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
மழைத்தூவானுக்கு மானியம் (Subsidy for rainforest)
மத்திய அரசின் பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் வேளாண் பயிர்களுக்குச் சொட்டுநீர் பாசனம், தெளிப்பான், மழைத்தூவான் ஆகியவை மானியத்தில் வழங்கப்படுகின்றன.
ரூ.2.20 கோடி ஒதுக்கீடு (An allocation of Rs. 2.20 crore)
கந்திலி வட்டாரத்தில் 420 ஏக்கர் பரப்பளவில் தண்ணீர் பாசனம் அமைக்க ரூ.2 கோடியும், திருப்பத்தூர் வட்டாரத்தில் 420 ஏக்கர் பரப்பளவில் அமைக்க ரூ.2 கோடியே 20 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கருவிகள் (Tools)
மக்காச்சோளம், கரும்பு, பருத்தி மற்றும் தென்னை பயிர்களுக்குச் சொட்டுநீர்ப் பாசனக் கருவிகள் வழங்கப்படுகின்றன. இதேபோல் நிலக்கடலை, காராமணி போன்ற பயறு வகை பயிர்களுக்குத் தெளிப்பு நீர்ப் பாசன கருவிகள் தரப்படுகின்றன.
100 % மானியம் (100% subsidy)
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப் படுகின்றன.
ரூ.40,000 மானியம் (Rs.40,000 grant)
மேலும், இத்திட்டத்தின்கீழ், 50 சதவீத மானியத்தில் நீர் சேமிப்பு தொட்டி அமைக்க அதிகபட்சமாக ரூ.40,000, மின் மோட்டார் அமைக்க ரூ.15,000 மற்றும் ஒரு ஏக்கர் பரப்பளவில் நீர்ப் பாசனம் அமைக்க அதிகபட்சமாக ரூ.10,000ம் வழங்கப்படுகிறது.
பின்னேற்பு மானியம் (Compensation grant)
சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கும் விவசாயிகள் நீர் பாசனக் அமைச்சுத் தரல்வாய்கள் தோண்டுவதற்கு ஒரு ஏக்கருக்கு 3,000 ரூபாய் பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் வழங்கப்படும்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
எனவே, இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று, புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், மண் மற்றும் நீர் பரிசோதனை ஆய்வு முடிவு அறிக்கை ஆகியவற்றுடன் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, ஆன்லைனில் பதிவு செய்து பயனடையலாம்.
திருநெல்வேலி
இதேபோல் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டாரத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் (காய்கனி, பழங்கள், பூச்செடிகள், மலைப்பயிர்கள்) சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டுநீர்ப் பாசனம் வழங்க 766 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.5.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசனம் மானியம் (Drip Irrigation Subsidy)
இத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர் பாசன நிறுவனங்கள் மூலம் அமைத்துக் கொடுக்கப்படும்.
இதுத் தவிர சொட்டுநீர்ப் பாசனம் பெறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் துணை நீர் மேலாண்மை இயக்கம் என்ற திட்டத்தின் கீழ் புதிதாக சொட்டுநீர் அமைக்கும் விவசாயிகளுக்குப் புதிதாக டீசல், மின்மோட்டார்கள் வாங்க அதிகபட்சமாக ரூ.15,000மும், ஆழ்துளைக் கிணறு அமைக்க அதிகபட்சமாக ரூ.25,000மும் வழங்கப்படுகிறது.
ரூ.40,000 மானியம் (Rs.40,000 grant)
தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் வாங்க அதிகபட்சமாக ரூ.10,000மும், தரைநிலையில் தண்ணீர்த் தொட்டி கட்ட அதிகபட்சமாக ரூ.40,000மும் மானியமாக வழங்கப்படும்.
மேலும் படிக்க...
சரியான விவரம் இல்லாமல் இதை தொடாதீர்கள்: குறிப்பாக நீங்கள்