Krishi Jagran Tamil
Menu Close Menu

சரியான விவரம் இல்லாமல் இதை தொடாதீர்கள்: குறிப்பாக நீங்கள்

Friday, 24 May 2019 10:30 PM
almonds

அதிகரித்து வரும் மாசு பிரச்சனையால் மக்கள் 'ட்ரை பிரூட்ஸ்' பக்கம் ஆர்வம் காட்டி வருகின்றார்கள். பண்டைய காலங்களில்  பாதாம் என்பது விசேஷம் மற்றும் விழா காலங்களில் மட்டுமே காண முடிந்தது. ஆனால் இப்பொழுது ட்ரை பிரூட்ஸில் பாதாம் முக்கிய இடம் வகிக்கிறது. பெற்றோர்கள் தங்களின்  பிள்ளைகள் புத்தி கூர்மையுடன் இருக்கவும், பெரியவர்கள் அலுவலகங்களில் சுறுசுறுப்பாக இருக்கவும், பெண்கள் தங்களை அழகு படுத்தவும் விரும்புகின்றார்கள். இவை அனைத்திற்கும் முக்கியமானதாக அமைவது இந்த பாதாம் பருப்பு என்பது மறுக்க முடியாத ஒன்றாகும்.

இன்றைய நிலையில் பாதாம் சாப்பிடுவது முக்கியமானதை தாண்டி இது ஒரு  ஃபேஷனாக மாறி விட்டது. இந்தியாவின்  எந்த முலைக்கு சென்றாலும் உங்களுக்கு  பாதாம் கிடைக்கும் அளவிற்கு எங்கும் கிடைக்க கூடியதாக மாறி விட்டது.  ஆனால் நீங்கள் என்றைக்காவது யோசித்தது உண்டா நீங்கள் விரும்பி சாப்பிடும் இந்த பாதாம் உங்கள் உடலுக்கு நன்மை பயக்குமா?  என்று. பாதம் பொறுத்த வரை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றது அல்ல. இதோ உங்களுக்காக சில தகவல்கள். 

பாதாம் அனைவருக்கும் ஏற்றதல்ல. இதுநாள் வரை பாதாம் பருப்பை அனைவரும் சாப்பிடலாம் என எண்ணி இருந்தவர்களுக்கு, இப்போது  பாதாமை யாறேல்லாம் சாப்பிட கூடாது என்ற விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

முக்கியமாக நீங்கள்

இரத்த அழுத்தம் இருப்பவர்கள்

உயர் இரத்த அழுத்தம்  உள்ளவர்களாயின் இப்போதே  பாதாம் சாப்பிடுவதை விட்டுவிடுங்கள். ஏன்னென்றால் இதில்  கொலஸ்டிரால் அதிகமாக இருப்பதால் இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு ஏற்றது இல்லை. மேலும் நீங்கள் மற்ற ட்ரை பிரூட்ஸ்யும் தவிர்ப்பது உங்களுக்கும் உங்கள் இதயத்திற்கும் நல்லது.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள்

பாதாமில் இருக்கும் ஆக்சலேட் என்னும் உட்பொருள் சிறுநீரக கோளாறு இருப்பவர்களுக்கு தீங்காக அமைகிறது. நீங்கள் இந்த பிரச்னையை எதிர்கொள்பவராக இருந்தால் பாதாம் சாப்பிடுவதை விட்டுவிடுங்கள். இல்லையென்றால்  உங்களுக்கு கேடாக அமையும்.

 

Almonds 1

செரிமான கோளாறு

இன்றைய நவீன உலகில் பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனை செரிமானம் ஆகும். உங்களில்  இந்த பிரச்சனை யாருக்கேனும் இருந்தால் பாதாம்  பருப்புக்கு டாடா சொல்லிவிடுங்கள்.

எடை குறைக்க நினைப்பவர்கள்

பாதாம் சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும். இதனால் உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் பாதாம் பருப்பை சாப்பிடுவதை மறந்து விடுங்கள். இதில் இருக்கும்  கொலஸ்டிரால்  உடல் எடையை அதிகரிக்க வல்லது.

மூச்சுப்பிரச்சனை 

மூச்சு பிரச்சனை, சுவாச கோளாறு மற்றும் ஒவ்வாமை (allergy) பிரச்சனை இருபவர்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் இதில் அதிகளவு ஹைட்ரோசியானிக் அமிலம் உள்ளதால் நரம்பு, மூச்சு, ஒவ்வாமை பிரச்சனைகளை அதிகரித்துவிடும்.

குறிப்பு: பாதாமை ஒரு நாளைக்கு காலையில் 10 மற்றும் மாலையில் 10 என்ற கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். காலையில் , மற்றும் மற்ற சமயங்களில் பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது

K.SAKTHIPRIYA
KRISHI JAGRAN

dry fruits almomds blood pressure kidney digestion weight loss breething
English Summary: Strictly you people must have aware before you eat Almonds, not suitable for everyon

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு!
  2. ஆட்டுக்கு ரூ.5 ஆயிரம்; மாட்டுக்கு ரூ.30 ஆயிரம் வரை காப்பீடு: நாகையில் மத்திய அரசின் கால்நடை காப்பீட்டுத் திட்டம்!
  3. மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான 6 மாதத்திற்கு வட்டிக்கு வட்டி இல்லை! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
  4. தமிழகத்தில் ரூ.1,298.20 கோடி முதலீட்டில் 7 தொழில் நிறுவனங்கள்! 8000 பேருக்கு வேலை!
  5. அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்திற்கு மழை வாய்ப்பு! - உங்க ஊரு லிஸ்ட்ல இருக்கா பார்த்துகோங்க!
  6. விவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!
  7. தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!
  8. விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!
  9. ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!
  10. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28ந்தேதி தொடங்க வாய்ப்பு!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.