ஒருங்கிணைந்த பண்ணையம் (Integrated Farming) அமைக்க விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக தலா ரூ.60,000 வழங்கப்படும் என திண்டுக்கல் வேளாண்மைத்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் பல விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
10 ஆடுகள் (10 Goats)
இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தலா ஒரு பசுமாடு, 10 ஆடுகள், 10 கோழிகள், ஒரு மண்புழு உரத் தொட்டி, ஒரு தேனி பெட்டி, 10 கொய்யா மற்றும் மாங்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
இவற்றைக் கொண்டு தங்களிடம் உள்ள இடத்திற்கு ஏற்றபடி விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையத்தை அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.
இதற்காக வேடசந்தூர் வட்டாரத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட விவசாயிகள் நேரடியாக சென்று கல்வார்பட்டி சந்தையில் கோழிகள் மற்றும் ஆடுகளையும், ஒட்டன்சத்திரம் சந்தையில் கறவை மாடுகளையும் கொள்முதல் செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வு (Officers inspect)
அவ்வாறு விற்பனை செய்யப்படும் கால்நடைகளை வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் சின்னசாமி, கால்நடை மருத்துவர் சோபனா, வேளாண்மை அலுவலர் மோகன் , குமார் ஆகியோர் கால்நடைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ரூ.60,000 Subsidy (60 Thousand Subsidy)
இது தொடர்பாக வேளாண்மைத் துறையினர் கூறுகையில்: இத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் கறவை மாடு, ஆடு மற்றும் கோழிகளைத் தொடர்ந்து 3 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். இதற்காக விவசாயிகளுக்கு பின்னேற்வு மானியமாக ரூ. 60,000 வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தாங்கள் வாங்கும் கறவை மாடு, ஆடு மற்றும் கோழிகளை காப்பிடு செய்வது நல்லது எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலை துவம்சம் செய்யும் மண் கரைசல்!
பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? சில டிப்ஸ்!
ஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்!