1. கால்நடை

பறவைக் காய்ச்சலில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? சில டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to protect chickens from bird flu? Attention Farm Owners!

Credit : The New York Times

பறவைக்காய்ச்சல் (Avian Influenza) தாக்கினால், அதிலிருந்து கோழிகளைப் பாதுகாப்பது குறித்தும், நோய் பரவாமல் தடுக்கும் வழிகள் குறித்தும் விரிவாகப் பார்க்கலாம்.

பறவைக் காய்ச்சல் ((Avian Influenza) )

பறவைக் காய்ச்சல் என்பது பொதுவாக, பறவைகளைத் தாக்குகின்ற (H5N1 போன்ற) வைரசு அல்லது நச்சுயிரி தொற்று நோயாகும். இது பறவைகளின் கண், வாய் மற்றும் மூக்கிலிருந்து கசியும் திரவம் அல்லது அதன் எச்சங்கள் மூலமே, ஒரு பறவையிடமிருந்து மற்றொரு பறவைக்குக் காய்ச்சல் பரவுகிறது.

இந்தத் திரவங்களோ, எச்சமோ பறவைகளின் தீனியிலோ அல்லது குடிக்கும் தண்ணீரிலோ கலந்துவிட்டால், அதன் மூலமாகவும் பறவைக் காய்ச்சல் பரவும்.

நோய்வாய்ப்பட்ட ஒரு கோழியைத் தொட்டு பணியாற்றிய கோழிப்பண்ணை ஊழியர் ஒருவரின் ஆடைகளின் வழியாகவும்கூட பரவும்.எனவே கோழிப் பண்ணைக்குள் எலி, பெருச்சாளி ஆகியவை நுழைந்துவிடாமல் கவனமாகப் பார்த்துக்கொள்வது அவசியம்.

தடுப்பது எப்படி? (How to prevent)

 • கோழிகளை தனிமைப்படுத்த வேண்டும். மூடப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவற்றை பராமரிப்பதும் மிக மிக அவசியமாகிறது.

 • கோழிப்பண்ணையில் இருக்கும் சாதனங்களைச் சுத்தமாக வைத்துக் கொள்வது மிக முக்கியம்.

 • அவற்றை அன்றாடம் தண்ணீர் விட்டு சுத்தப்படுத்த வேண்டும்.

 • கிருமி நாசினி கொண்டு பண்ணையைச் சுத்தப்படுத்துவது நோய் பரவலைக் கட்டுப்படுத்தும்.

 • கழிவுகளை மக்கள் புழங்கும் இடத்தில் கொட்டுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டியது அவசியம்.

 • பண்ணைக்குள் கார், வேன் போன்ற வாகனங்கள் நுழைய நேர்ந்தால், அவை உள்ளே வருவதற்கு முன்பாக வெளியிலேயே சக்கரங்களை நன்றாகக் கழுவி, கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே அனுமதிக்க வேண்டும்.

 • மற்ற பண்ணைகளுக்கும், சந்தைகளுக்கும் செல்வதைத் தவிர்க்கலாம்.

 • கை, கால்களை நன்றாக கழுவிச் சுத்தம் செய்துகொண்ட பிறகே பண்ணைக்குள் செல்ல வேண்டும்.

 • அதேபோல, வெளியே வந்ததும் உங்கள் கை, கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவவேண்டும்.

 • வெவ்வேறு இடங்களில் இருந்து உங்களுக்கு பறவைகள் வந்திருக்கின்றன என்றால் அவற்றை ஒன்றோடு ஒன்றாக கலக்காதீர்கள்.

கவனிக்க வேண்டியவை

 • மனிதர்களின் ஆடைகள், தலைமுடி, காலனி (கோழிப்பண்ணைக்குள் அணிவதற் கென்றே தனியாக காலனிகள் உள்ளன), வாகனங்களின் டயர் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

 • பறவைகளின் எச்சம், பறவைக் காய்ச்சல் கிருமிகளால் பாதிக்கப்பட்டு இறந்த பறவைகளின் மிச்சம், காகம், குருவி போன்ற பறவைகளிடத்தில் கூடுதல் எச்சரிக்கைத் தேவை.

அறிகுறிகள் (Symptoms)

 •  திடீரென பறவைகள் செத்து மடியும்.

 • பறவைகளின் மூக்கிலிருந்து நீர் வடியும்.

 • பறவைகள் உணவு உண்ண மறுக்கும்.

 • கண், கழுத்து தலை ஆகியவை தடித்து காணப்படும்.

 • சிறகுகள் விரைத்துக் கொள்ளும்.

 • சோம்பிப்போய் சுருண்டு படுத்துக் கொள்ளும்.

 • வயிற்றுப்போக்கு ஏற்படும்.

பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்.?

பாதிக்கப்பட்ட பறவைகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும்.
இதற்கான பணிகளில் ஈடுபடும்போது பிரத்யேக ஆடைகளை அணிய வேண்டும்.
பண்ணை பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று சந்தேகம் வந்தால்கூட, அத்தனை பறவைகளையும் கொல்லச் சொல்லி உத்தரவு வந்துவிடுமோ என்ற பயத்தில் அரசாங்க அதிகாரிகளிடம் எதையும் மறைக்கக்கூடாது.அதிகாரிகளிடம் உண்மையான நிலவரத்தைக்கூறினால், மற்றக் கோழிகளைப் பாதுகாக்க அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும் படிக்க...

தொடர் மழையால் நெற்பயிரை பூச்சித் தாக்கும் அபாயம்- கவலையில் விவசாயிகள்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முதல் முறையாக காப்பீடு!

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி- சில கட்டுப்பாடுகளுடன்!

English Summary: How to protect chickens from bird flu? Attention Farm Owners!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.