Farm Info

Monday, 06 September 2021 01:29 PM , by: Elavarse Sivakumar

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, வரும் 10ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது:

06.09.21

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

07.09.21

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

08.09.21

கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

09.09.21 மற்றும் 10.09.21

தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவைக் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிதமான மழை (Moderate rain)

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது மழை பெய்யக்கூடும்.

வெப்பநிலை (Temperature)

வெப்பநிலை அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழை பதிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)

வங்கக்கடல் பகுதிகள் (Areas of the Bay of Bengal)

06.09.21

வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள் (Areas of the Arabian Sea)

06.09.21 முதல் 07.09.21 வரை

கேரள மற்றும் கர்நாடகக் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

06.09.21 முதல் 10.09.21 வரை

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இனி உங்களுக்கு ரேஷன் பொருள்கள் பெறுவதில் சிக்கல்- அரசின் விதிகளில் மாற்றம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)