1. தோட்டக்கலை

தொடர் மழை எதிரொலி- வாழைக்கு மாறிய விவசாயிகள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

தொடர் மழை பெய்து வருவதால், விருதுநகர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வாழை சாகுபடி (Banana cultivation)

விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, அர்ச்சுனாபுரம், கான்சாபுரம், அத்தி கோவில், கூமாபட்டி, கிழவன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர்.

நிரம்பிய நீர்நிலைகள் 

இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. அவ்வாறு பெய்த தொடர் மழை காரணமாக கண்மாய்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.

கிணறுகளில் தண்ணீர் (Water in wells)

அதேபோல கிணறுகளிலும் போதியத் தண்ணீர் இருப்பதால் தற்போது இப்பகுதியில் விவசாயிகள் வாழையை ஆர்வத்துடன் சாகுபடிப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

உரமிடும் பணி (Fertilizing work)

தற்போது வாழைக்கு விவசாயிகள் உரமிடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

வத்திராயிருப்பு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகிறோம். கடந்த ஆண்டு பெய்த தொடர் மழையின் காரணமாகவும், இந்த ஆண்டு கோடையில் பெய்த தொடர் மழையின் காரணமாகவும் நீர்நிலைகள் மற்றும் கிணறுகளில் தண்ணீர் போதுமான அளவு இருக்கிறது.

இதனைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டும் வாழையைப் பயிரிட்டு விவசாயப் பணியினை மேற்கொண்டு உள்ளோம்.

எதிர்பார்ப்பு (Anticipation)

இன்னும் சில மாதங்களில் வாழை பூ எடுத்து குழையிடும் பருவத்தில் இருப்பதால் தற்போது உரமிடும் பணி நடந்து வருகிறது.

விலை இல்லை (No price)

இருப்பினும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வாழை இலையின் விற்பனை போதிய வருமானத்தை ஈட்டவில்லை. இதனால் நாங்கள் வேதனையுடன் உள்ளோம்.
வாழைத்தார் மூலம் இந்த ஆண்டு போதிய லாபம் ஈட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

பயிர்களின் தேவையை, பயிர்களே தெரிவிக்கும் தொழில்நுட்பம்!

English Summary: Echo of continuous rain- Farmers who have changed to bananas! Published on: 05 August 2021, 08:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.