Farm Info

Thursday, 19 November 2020 10:03 AM , by: Elavarse Sivakumar

நெல் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பயிரைப் பாதுகாத்து கொள்ள, டிசம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் க.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • நாமக்கல் மாவட்டத்தில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் நெல்

    சம்பா II மற்றும் வெங்காயம் II பயிர் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  • இதன்படி நெல் II வால் சம்பா 21 பிர்க்காக்களிலும் மற்றும் வெங்காயம் II 4 பாக்காக்களிலும் அறிவிக்கை செய்யப் பட்டுள்ளது.

  • கடன் பெறும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளில் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

  • கடன் பெறாத விவசாயிகள், பொதுச் சேவை மையங்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.

Credot : Business Line

  • இத்திட்டத்தில் நெல் || சம்பா பயிருக்கு 15.12.2020ம் தேதிக்குள்ளும், வெங்காயம் 1 பயிருக்கு 30.11.2021 தேதிக்குள்ளும் காப்பீடு செய்து கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கு நெல் || சம்பா பயிருக்கு ரூ.494,25 பிரிமீயம் மற்றும் வெங்காயம் II பயிருக்கு ரூ.1805.58 பிரிமியம் செலுத்த வேண்டும்

  • பயிர் காப்பீடு செய்யும் முன், முன்மொழிவு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலரின் அடங்கள், விதைப்பு சான்று வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் இணைத்து கட்டணத்தை வெறுக்க வேண்டும்.

  • இதுதொடர்பான விபரங்களுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குதல் அலுவலகங்களை அணுகலாம்.

அரியலூர்

  • இதேபோல், அரியலூரிலும் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய டிசம்பர் 15ம் தேதி கடைசி நாள் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது.

  • சம்பா பயிர் காப்பீடு செய்ய ஏக்கருக்கு பிரிமியம் தொகை ரூ.512 ஆகும். காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.34,500 ஆகும்.

  • இத்திட்டத்தில் சம்பா நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளும் காப்பீடு செய்து பயன்பெறலாம்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!

கூடுதல் மகசூலுக்கு பறவைகளும் முக்கியமே !

ரூ.80ஆயிரம் சம்பளத்தில் வேலை : உடனே விண்ணப்பியுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)