தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் அரசின் திட்டத்தில் விவசாயிகள் இணைந்து பயன்பெறலாம் என சேலம் மாவட்ட வேளாண்துறை அறிவுத்தியுள்ளது.
வேளாண் வளர்ச்சித் திட்டம் (Agricultural Development Program)
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில், மகுடஞ்சாவடி வட்டாரம், கண்டர்குலமாணிக்கம், கனக்கிரி, அ.தாழையூர் ஏகாபுரம், நடுவனேரி, கூடலூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
இதையொட்டி இத்திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பை , அரியாம்பாளையம் கிராமத்தில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிமேகலா தேவி தொடக்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் இத்திட்டத்தில் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு நியமிக்கப்பட்ட அலுவலர்களைத் தொடர்பு கொண்டுப் பயனடையலாம்.
தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)
-
ஆதார் அட்டை நகல்
-
கணினி பட்டா
-
வங்கிக்கணக்குப் புத்தக நகல்
-
பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டு
மேலே கூறியவற்றை வழங்கித் திட்டத்தில் இணையலாம். இத் திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களில் உள்ள முள்புதர்களை அகற்ற மானியம் வழங்கப்படும்.
ஆழ்துளைக் கிணறு அமைத்து நுண்ணீர் பாசனம் திட்டத்தையும் செயல்படுத்தலாம்.
ஓராண்டுக்கு அல்லது அதற்கு மேல் தரிசாக உள்ள நிலங்களை வைத்திருக்கும் விவசாயிகள் ஒன்றிணைந்து ஒரு தொகுதியாக மாற்றி தரிசு நில மேம்பாடு குழுக்களை அமைத்து இத்திட்டத்தில் பலனடையலாம்.
இத்திட்டத்தின் கீழ் இணைந்து தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விரும்பும் விவசாயிகள் வேளாண் அலுவலர்களளை அணுகி பயனடையலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிகாரிகளின் பெயர், செல்போன் எண்கள் :
-
கனககிரி உதவி வேளாண்மை அலுவலர் தங்கவேல் -9942521820,
-
கூடலூர் உதவித் தோட்டக்கலை அலுவலர் சக்திவேல் 98657 96437
-
நடுவனேரி உதவி தோட்டக்கலை அலுவலர் செந்தில்குமார்- 73394 50519
-
ஏகாபுரம் உதவி வேளாண்மை அலுவலர் அசோக்குமார் - 94426 68864
-
அ. தாழையூர் உதவி வேளாண்மை அலுவலர் மாவிரிச்சான்- 97885 60809
-
வேளாண்மை அலுவலர் பழனிசாமி- 9943345801,
-
துணை வேளாண்மை அலுவலர் ஸ்ரீரங்கன்- 86677 21505,
-
துணை தோட்டக்கலை அலுவலர், ராகவேந்திரன் - 76676 67695 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
நெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!
நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!