1. தோட்டக்கலை

விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் உயிர் உரங்கள்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Bio-fertilizers at 50% subsidy to farmers!

உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுவதால், அவற்றை வாங்கிப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இயற்கை விவசாயம் (organic farming)

இந்தியாவின் பாரம்பரிய விவசாயம் என்றால், அது இயற்கை விவசாயம்தான்.
ஆனால் காலமாற்றத்திற்கு ஏற்பவும், தேவைக்கு அதிகமாகவும், கூடுதல் மகசூல் மற்றும் லாபத்திற்காகவும் ரசாயன உரங்கள் பக்கம் விவசாயிகள் தஞ்சம் அடைந்தனர். இதன் விளைவாகவே மண்ணில் வளம் குன்றியதுடன், மனிதர்களின் ஆரோக்கியத்திலும் இடி விழுந்தது.

இயற்கை உயிர் உரம் (Natural bio-fertilizers)

குறிப்பாகப் பயிர்களுக்கு ரசாயன உரங்களின் தேவை அதிகரித்து வருவதால், உரத்தேவையைக் குறைக்க இயற்கை உயிர் உரம் பரிந்துரை செய்யப்படுகிறது.

யூரியாவைக் குறைக்க (To reduce urea)

இதுகுறித்து தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட மேலாண்மைக்குழு அலுவலர்கள் கூறியதாவது: பயிறுவகைப் பயிர்களுக்கு பயிறு வகை ரைசோபியம், தானியப் பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் இடுவதன் வாயிலாகக் காற்றில் உள்ள நைட்ரஜன் சத்தை பயிர்களுக்கு கிரகித்துக் கொடுக்கிறது.இதன் வாயிலாக பயிர் வளர்ச்சியை பொருத்து யூரியா உர தழைச்சத்து தேவையைக் குறைத்து கொள்ளலாம்.

பாஸ்பரஸ் சத்து (Phosphorus nutrient)

அதேப் போன்று பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் இடுவதன் வாயிலாக மண்ணில் கிடைக்காத நிலையில் உள்ள பாஸ்பரஸ் சத்தை பயிர்களுக்கு கிடைக்க கூடிய நிலைக்கு மாறுதல் செய்கிறது.

செறிவூட்டிய உயிர் உரம் (Concentrated bio-fertilizer)

இதன் வாயிலாக பாஸ்பரஸ் உரத்தேவையை குறைக்கலாம். செறிவூட்டிய உயிர் உரம் ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும். உயிர் உரத்தினை, நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலக்க வேண்டும்.

அதனுடன் சிறிதளவு அரிசிக்கஞ்சி மற்றும் சர்க்கரைப்பாகுச் சேர்த்து நன்குக் கலக்கித் தண்ணீர் தெளித்துவர வேண்டும். உயிர் உரங்கள் தொழு உரத்தில் பல்கிப் பெருகி செறிவூட்டப்படுகிறது. இதனை பயிர்களுக்கு இடுவதன் வாயிலாக நல்ல விளைச்சல் பெறலாம்.

50 சதவீதம் மானியத்தில் (At a 50 percent subsidy)

உயிர் உரங்களுக்குத் தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் பயிறுவகை திட்டத்தின் வாயிலாக ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவும் ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள் திட்டத்தின் கீழ் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவும், எண்ணெய்வித்துப் பயிர்கள் திட்டத்தின் கீழ் ரைசோபியம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா திரவ உயிர் உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு திருப்பூர் மாவட்ட தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட மேலாண்மை குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க...

நெல், மக்காச்சோளம், பருத்தி -பயிர் காப்பீடு செய்ய அழைப்பு!

நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்டப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி!

English Summary: Bio-fertilizers at 50% subsidy to farmers! Published on: 19 September 2021, 07:46 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.