மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில், செப்டம்பர் வரை, கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்படும் என, ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:
செப்டம்பர் வரை (Until September)
ஈரோடு மாவட்டத்தில், 2021-22க்கான மத்திய அரசின் ஆதார விலை திட்டத்தில், ஈரோடு விற்பனை குழுவில் செயல்படும் சத்திய மங்கலம், அவல்பூந்துறை, எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில், கொப்பரை கொள்முதல், வரும் செப்டம்பர் மாதம் வரை செய்யப்படவுள்ளது.
கொள்முதல் விலை (purchasing price)
ஒரு கிலோ பந்து கொப்பரை, ரூ.106க்கும், அரவைக் கொப்பரை, ரூ.103.35 வீதமும் கொள்முதல் செய்யப்படும்.
ஆவணங்கள் (Documents)
திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை, வங்கி கக்கு புத்தகத்தின் முகப்பு, சிட்டா, அடங்கல் நகல்களுடன், விற்பனை கூடங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொப்பரை (Cauldron)
தேங்காய் அளவுக்கு மீறி முற்றியிருந்தால் அதன் உள்ளே இருக்கும் நீர் முற்றிலும் வற்றிவிடும். இத்தகைய முற்றிய தேங்காயே கொப்பரை எனப்படும்.
கொப்பரை உற்பத்தி (Copper production)
நீர் முழுவதும் வற்றாத தேங்காயை வெயிலில் உலர்த்தி கொப்பரை ஆக்குவதும் உண்டு. அதிலிருந்தே எண்ணெய் எடுக்கப்படுகிறது.
மருத்துவப் பயன்கள் (Medicinal uses)
-
முற்றிய தேங்காய் ஆண்மையை பெருக்குவதோடு அதில் உள்ள வைட்டமின் இ முதுமையைத் தாமதப்படுத்த உதவும்.
-
தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.
தேங்காய் எண்ணெய் (coconut oil)
சுத்தமான தேங்காய் எண்ணெயில் புரதச்சத்து நிறைந்திருப்பதால், வாரம் ஒருநாள் தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து, ஊற வைத்து குளித்து வந்தால் பெண்களின் கூந்தல் வேர்க்கால்கள் பலமடைவதோடு, பொடுகுத்தொல்லை நீங்கும்.
முகம் பொலிவுக்கு (To brighten the face)
கேரள மாநிலப் பெண்கள் பெரும்பாலும், தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதோடு அன்றாட சமையலிலும் தேங்காய் எண்ணெயையே பயன்படுத்துகின்றனர்.
மேலும் படிக்க...
வீட்டுத்தோட்டம் மூலமே ஆரோக்கியமான எதிர்காலம் பிறக்கும்! - வேளாண் விஞ்ஞானி அறிவுறுத்தல்
மண் வளத்தை பெருக்க கோடை உழவு செய்யுங்கள்! - வேளாண் துறை அறிவுரை!!