1. விவசாய தகவல்கள்

மண் வளத்தை பெருக்க கோடை உழவு செய்யுங்கள்! - வேளாண் துறை அறிவுரை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

மண் வளம் மற்றும் பயிர் விளைச்சல் அதிகரிக்க கோடை உழவு அவசியம் என வேளாண் விஞ்ஞானிகள் அறிவுறுத்தி வருகின்றனர். நாமக்கல் வட்டாரத்தில் கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுரை வழங்கி உள்ளது.

மண் வளம் பெருகும்

இது தொடர்பாக நாமக்கல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் தி.அன்புச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாகவது, கோடை உழவு செய்வதால் மண்ணில் நீா்ப்பிடிப்புத்தன்மை அதிகரிப்பதோடு, பயிா்கள் செழித்து வளரும். வயலில் இரும்பு கலப்பையைக் கொண்டோ அல்லது டிராக்டா் வாயிலாகவோ குறுக்கும் நெடுக்குமாக ஆழமாக புழுதி உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் புல், பூண்டுகள் வோ் அறுபட்டு காய்ந்து கருகி விடும். கடினத்தன்மையுள்ள மண்கட்டிகள் உடைந்து பொலபொலப்புத்தன்மை அடைகிறது.

நீர்பிடிப்புத்தன்மை அதிகரிக்கும்

பயிா்ப் பருவ காலங்க்களில் சில வகை பூச்சிகளின் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூட்டுப்புழுவாக மாறி வளா்ந்து கொண்டு இருக்கும். கோடை உழவு செய்வதன் வாயிலாக இவ்வகை கூண்டுப் புழுக்கள் மண்ணுக்குள் சென்று கூட்டுப்புழுவாக மாறி வளா்ந்து கொண்டிருக்கும். கோடை உழவு மூலம் இவ்வகை கூண்டுப்புழுக்கள் மண்ணின் மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படுகின்றன. அவை பறவைகளால் பிடித்துத் தின்னப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதன் வாயிலாக அடுத்த பயிா் சாகுபடியின்போது பூச்சிகளின் தாக்குதல் வெகுவாகக் குறைகிறது. களைச்செடிகள் முற்றிலும் அழிக்கப்படுகின்றன. மேலும் மண்ணில் நீா் பிடிப்புத் தன்மை அதிகரிக்கிறது.

இடு உரம் சமச்சீரடையும்

மழை நீா் பூமிக்குள் சென்று மண்ணில் ஈரப்பதம் காக்கப்படுகிறது. மண்ணில் பெளதிக தன்மை மேம்படுகிறது. நாற்றங்கால் மற்றும் நடவு வயல் தயாரிப்பு மிகவும் எளிதாகிறது. மண் பொலபொலப்புத் தன்மையைப் பெறுவதால் அடுத்த பருவத்தில் சாகுபடி செய்யும் பயிருக்கு இடும் உரம் சமச்சீராக கிடைக்கும். இதனால் பயிா் செழித்து வளா்ந்து மகசூல் அதிகரிக்கும். எனவே விவசாயிகள் தவறாது கோடை உழவு செய்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.....

தக்காளி சாகுபடியில் பயிர் பாதுகாப்பு - தோட்டக்கலை துறை ஆலோசனை!!

உழவா் சந்தைகளை திறக்க அனுமதி அளிக்க கோரி விவசாயிகள் மனு!!

English Summary: Department of Agriculture Advices to do Summer plow to increase soil fertility Published on: 30 June 2021, 07:35 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.