பிஎம் கிசான் திட்டத்தில் கேய்சி சரிபார்ப்பை முடிக்க இன்னும் 4 நாட்கள்தான் அவகாசம் உள்ளது. இதை முடிக்காவிட்டால், ரூ.2000 கிடையாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிஎம் கிசான்
நாட்டிலுள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசு பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) என்ற விவசாய நிதியுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக 6000 ரூபாய் வழங்கப்படும். ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என, விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கே இந்தப் பணம் அரசு தரப்பிலிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.
12ஆவது தவணை
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 11 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 12ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று பதிவு செய்த விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
விரைவில் 12ஆவது தவணைப் பணம் செலுத்தப்பட உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கேஒய்சி முக்கியம்
இத்திட்டத்தில் நிதியுதவி பெறுவதற்கு பயனாளிகள் தங்களது கேஒய்வி அப்டேட்டை முடிப்பது அவசியமாகும். இது ஆதார் மற்றும் மொபைல் நம்பரை அடிப்படையாகக் கொண்ட ஒரு சரிபார்ப்பு முறையாகும். பயனாளிகள் அனைவரும் தங்களுடைய பிஎம் கிசான் கணக்கில் ஆதார் மற்றும் மொபைல் நம்பர் சரிபார்ப்புக்கு உட்பட வேண்டும்.
அவகாசம்
பிஎம் கிசான் கேஒய்சி சரிபார்ப்புக்கு முதலில் ஜூலை 31 வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நிறையப் பேர் இந்த காலத்தில் வேலையை முடிக்காததால் மேலும் 4 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அதாவது, ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பயனாளிகள் அனைவரும் தங்களுடைய கேஒய்சி அப்டேட்டஒ முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் கிடைக்காது.
மேலும் படிக்க...