Farm Info

Monday, 25 July 2022 11:09 PM , by: Elavarse Sivakumar

ஈரோட்டில் 11 லட்சத்து 37 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் போனதால், தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் தேங்காய்கள் விற்பனை செய்யப்பட்டது.

ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளையும் தேங்காய்கள், அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வரப்பட்டு, ஏலம் விடப்படுவது வழக்கம்.

293 மூட்டைகள்

அதன்படி,அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 293 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 82 ரூபாய் 77 காசுக்கும், அதிகபட்ச விலையாக 84 ரூபாய் 67 காசுக்கும், சராசரி விலையாக 84 ரூபாய் 55 காசுக்கும் ஏலம் போனது.

ரூ.11 லட்சம்

அதேபோல, இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 65 ரூபாய் 92 காசுக்கும், அதிகபட்ச விலையாக 78 ரூபாய் 69 காசுக்கும், சராசரி விலையாக 76 ரூபாய் 65 காசுக்கு ஏலம் போனது. மொத்தமாக 14,278 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு 11 லட்சத்து 37 ஆயிரத்து 957 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

லாபம் தந்த ஏலம்

இதேபோல், ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் தேங்காய் பருப்பு 724 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் முதல் தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 82 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 87 ரூபாய் 20 காசுக்கும், சராசரி விலையாக 85 ரூபாய் 60 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இதே விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற தேங்காய் ஏலத்தில் மொத்தம் 21,822 தேங்காய்கள் 1 லட்சத்து 78 ஆயிரத்து 191 ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

நெல் கொள்முதல் முன்கூட்டியேத் தொடங்கும்- மத்திய அரசு!

விமானத்தில் பயணித்த பெற்றோர்- இன்ப அதிர்ச்சி அளித்த மகன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)