கோவை மாவட்ட விவசாயிகள் தென்னை மரங்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுமாறு, வேளாண் துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
இது குறித்து கோவை மாவட்டம், ஆனைமலை வேளாண் உதவி இயக்குநர் விவேகானந்தன் கூறியதாவது :
நோய்களால் பாதிப்பு (Vulnerability to diseases)
பல இடங்களில் தென்னையில், கேரள வாடல் நோய், சிகப்பு கூன் வண்டு உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல்கள் காணப்படுகிறது. நோய் பாதிப்பினால், தென்னை மரங்கள் பாதிக்கும் போது, உரிய இழப்பீடு பெறுவதற்காக, விவசாயிகள் முன் கூட்டியே காப்பீடு செய்ய வேண்டும்.
பிரீமியம் தொகை (Premium Amount)
வேளாண் விரிவாக்க மையத்தில் முன்மொழிவு படிவத்தை பெற்று, தகவல்களை பூர்த்தி செய்து, பிரீமிய தொகையை வரைவோலையாக (டி.டி.) சிட்டா, அடங்கலை இணைத்து வேளாண் அலுவலகத்தில் சமர்ப் பிக்க வேண்டும். காப்பீடு துவங்கிய ஒரு மாதத்துக்குள் இழப்பீடு கேட்க முடியாது.
நான்கு அல்லது ஏழு வயது முதல், 15 வயது வரையுள்ள ஒரு தென்னை மரத்துக்கு, ரூ.2.25 பிரீமியமாக செலுத்த வேண்டும்.
ஒரு மரத்துக்கு, ரூ.900 இழப்பீடாக வழங்கப்படும். 16 முதல், 60 வயதுள்ள ஒரு மரத்துக்கு, ரூ.3.50 பிரீமியம் செலுத்த வேண்டும். ரூ.1,750 இழப்பீடாக பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!
பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!