கறவை மாடுகளுக்கு இனப்பெருக்கத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கு வெளிநாட்டு தீவனப்பயிர் காரணமாக இருக்கலாம் என்று வேளாண் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப்போதெல்லாம் கறவை மாடுகளின் இனபெருக்கம் தள்ளிபோவதாக குறிப்பிட்டனர். மேலும் சில மாடுகள் சினை பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறினர்.
இது குறித்து வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில் கறவை மாடு வளர்ப்போர் 'சூப்பர் நேப்பியர்' எனப்படும் வெளி நாட்டு தீவனப்பயிர்கள் கறவை மாடுகளுக்கு வழங்குகின்றனர்.இந்த தீவனப் பயிர்களில் 'ஆக்ஸாலிக்' அமிலம் காணப்படும். இதன் அளவு 2.8 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.
ஆனால் இந்த சூப்பர் நேப்பியர் தீவணப் பயிரில் குறிப்பிடப்பட்ட அமிலத்தின் அளவு அதிகமாக உள்ளதாக கூறினர். மாடுகள் தொடர்ந்து இந்த தீவனத்தை உட்கொள்வதால் மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீரகம் வழியாக அதனுடைய இயற்கையான கால்சியம் சத்து வெளியேறுகிறது. இந்த காரணத்தினால் சினை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் சினைபிடித்தாலும் கன்றுகள் ஈனும் போது மிகவும் பலவீனமாக காணப்படுகின்றன. இதனால் கன்றுகள் நிற்கமுடியாத நிலைக்கு செல்கின்றன.
இது போன்ற காரணத்தினால் சூப்பர் நேப்பியர் தீவணப் பயிர்களை கால்நடைக்கு வழங்கக் கூடாது என அகில இந்திய தீவனப்பயிர் ஆராய்ச்சி கழகம் மேலும் கோவையில் உள்ள தமிழ்நாடு ஆராய்ச்சி கழகத்தினரும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு வேளாண்மை பல்கலை அறிமுகப்படுத்தியுள்ள கோ- - 3 கோ- - 4 கோ- - 5 ஆகிய புல் வகைகளை சூப்பர் நேப்பியர் தீவணப் பயிர்களுக்கு பதிலாக கறவை மாடுகளுக்கு தீவனமாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க:
கறவை மாடு, அசில் ரகக் கோழி வழங்கியதில் மெகா ஊழல் - மருந்து கொள்முதலிலும் பல கோடி சுருட்டல்!