Krishi Jagran Tamil
Menu Close Menu

பசும்பால் மற்றும் எருமை பாலில் உள்ள முக்கிய வேறுபாடுகள்

Tuesday, 05 November 2019 05:45 PM
Health Benefits of Milk

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பால் குடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். பால் என்பது கால்சியம் நிறைந்த, உடலுக்கு தேவையான ஒரு முழு உணவாக பார்க்கப்படுகிறது. உடல் எடையை பாதுகாக்கவும், கலோரிகளை எரிக்கவும் பால் உதவுகிறது. மேலும் பால் குடிப்பதால் உடலுக்கு நல்ல சக்தியும், எலும்புகளுக்கு உறுதியும் அளிக்கிறது.

சத்துக்கள்

பசும்பால் 90% நீர்தன்மையுடன் அடர்த்தி குறைவாகவும், எளிதில் ஜீரணிக்க கூடியது. எருமை பாலில் கால்சியம், பாஸ்போரோஸ் , மெக்னீசியம், புரதம், கொழுப்புச் சத்து  மற்றும் பொட்டாசியம் அதிகம் காணப்படுகிறது.

Cows Milk Nutritious

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

 • மாட்டுப்பாலை விட எருமைப்பாலில் 100சதவீதம் கொழுப்பு சக்தி அதிகம் உள்ளது. மேலு இது உடல் பருமனாக இருப்பவர்கள் குடித்தால் உடல் எடை மேலும் அதிகரிக்க கூடும்.
 • எருமை பாலில் 11 சதவீத அளவு புரதச்சத்து இருப்பதால் தலை முடிக்கு மிகவும் நல்லது. தலை முடி சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் எருமைப்பால் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
 • எருமை பால் உடலின் உள்ள உறுப்புகளை சுத்தமாகவும் மற்றும் சத்தாகவும் வைத்துக்கொள்வதுடன் உடலின் வெளி பாகங்களுக்கும் நல்லதாகும். பாலை தொடர்ந்து குடித்துவந்தால் முகம் பளபளக்கும் மேலும் சருமம் சார்ந்த பிரச்சனைகள் தீர்வு பெரும்.
 • பசும்பாலில் 90% சதவீதம் நீர்த்தன்மை உண்டு. பசும்பாளில் புரதம், கொழுப்பு, மற்றும் கார்போஹைட்ரெட் உள்ளது. எருமை பாளை விட கொழுப்பு தன்மை இதில் குறைவு. பசும் பால் எளிதில் ஜீரணமாக கூடியது என்பதனால் இதனை பச்சிளம் குழந்தைகளுக்கு கொடுப்பது நல்லது.
 • எருமை பாலை நீண்ட நாள் வரை வைத்து பயன்படுத்தலாம் , ஆனால் பசும்பாலை 1அல்லது 2 நாள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்த முடியும்.
Buffalo Milk

இரண்டுமே சிறந்ததுதான், பாக்கெட் பாலுடன் ஒப்பிடுகையில். பால் என்றாலே ஆரோக்கியம், சத்து, வலிமை ஆகியவை. தங்கள் உடல் தன்மைக்கேற்ப இவ்விரண்டில் எதை வேண்டுமானாலும் குடிக்கலாம். உடல் பருமனாக இருப்பவர்கள்,  ஜீரண கோளாறு இருப்பவர்கள், பசும்பாலை குடிக்கலாம். தேகம்  மெலிந்தவர்கள்,  சருமம் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் எருமை பாலை மேற்கொள்ளலாம். அவரவரின் உடல் தன்மைக்கேற்ப தங்களது விருப்பத்திற்கு ஏற்றபடி எடுத்துக்கொள்ளலாம். பாக்கெட் பாலிற்கு பதிலாக கறந்த எருமைபால்,  பசும்பால் எடுத்துக்கொள்வது உடலுக்கும் மற்றும் அதனை வளர்ப்பவர்களுக்கு நன்மை அளிப்பதாக அமையும். 

Anitha Jegadeesan
Krishi Jagran

Cow Milk vs. Buffalo Milk Nutrients benefits of Milk Cow milk and buffalo milk Health benefits of Milk Different types of milk
English Summary: Do You Know The Major Differences of Cow Milk Versus Buffalo Milk? Check Nutrients Values also

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription

KJ Tamil Helo App Campaign

Latest Stories

 1. பழ ஈ தாக்குதலை கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை ஆலோசனை
 2. வீடு, வாகன கடன்களுக்கான கடன் தொகை செலுத்த மேலும் 3 மாதம் அவகாசம்!!
 3. கோடை உழவை மேற்கொள்ள விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு
 4. தமிழகத்தில் வேளாண் துறை சார்பில் காய்கறி விதைகள் வழங்கும் பணி துவக்கம்
 5. பழங்களின் அரசன் மாம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
 6. களர் / உவர் நிலங்களை பயன்தரும் விளை நிலமாக மாற்றுவதற்கான யுக்திகள்!!!
 7. மஞ்சளின் தரம் குறித்து அறிய கோபி வேளான் அறிவியல் நிலையத்தில் குவியும் விவசாயிகள்
 8. மத்திய வேளாண் துறை அமைச்சகம் மற்றும் விவசாய நலத்துறை முடிவு
 9. மழை நீரை வீணாக்காமல் சேமித்து பயன் பெற வேளாண்துறை ஆலோசனை
 10. தேசிய மண்வள இயக்க திட்டத்தின் கீழ் மண்மாதிரிகள் சேகரிக்கும் பணி தீவிரம்

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.