கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க கூட்டுறவு சங்கங்களில் நடப்பு நிதியாண்டில் நவம்பர் 29-ஆம் தேதி வரை 10 லட்சம் பேருக்கு 8,185 கோடி ரூபாய் அளவுக்கு பயிர் கடன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
கூட்டுறவு துறையில் செயல்படுகின்ற கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடன் பெறுகின்ற தேதியில் இருந்து குறித்த காலத்திற்குள் கடனை முழுதும் செலுத்துவோருக்கு வட்டி முழுதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: PMFBY சம்பா நெல் காப்பீடு செய்ய காலக்கெடு| பல பகுதிகளில் மின் தடை| அதாரை புதுப்பித்துக் கொள்ள முகாம்
இந்த நிலையில் விவசாயிகள், தங்களின் தேவைக்குக் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கவே ஆர்வம் காட்டி வருகின்றனர். கடன் வாங்கியவர்களே தொடர்ந்து வாங்கி வருகின்றனர். எனவே, புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்து, அவர்களுக்குக் கடன் வழங்க முன்னுரிமை அளிக்குமாறு அதிகார்களுக்குக் கூட்டுறவு துறை உத்தரவிட்டு இருக்கிறது.
இதன் விளைவாக நடப்பு நிதியாண்டில், நவம்பர் 29-ஆம் தேதி 10.75 லட்சம் பேருக்கு 8,185 கோடி ரூபாய் அளவுக்கு பயிர்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. முந்தய ஆண்டின் இதே காலத்தில் 8.71 லட்சம் பேருக்கு 5.911 ரூபாய் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இம்மாதத்திற்குள் பயிர்கடன் வழங்குவதில், 10 ஆயிரம் கோடி ரூபாய் என்ற இலக்கினை அடையுமாறு அதிகாரிகளைக், கூட்டுறவு துறை அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் நடப்பு நிதியாண்டு முடிவடையும், 2023 மார்ச்சுக்குள் 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த நிதியாண்டில் 14.48 லட்சம் பேருக்கு 10 ஆயிரத்து 292 கோடி ரூபாய் பயிர் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க
Rationcard: வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைகள்: கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு!