பஞ்சு விலை ஒரு கேண்டியின் விலை அதிரடியாக 93 ஆயிரத்து 500 ரூபாயை எட்டியுள்ளது. இதனால் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.இதன் எதிரொலியாக ஜவுளித்துறையும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.இதேபோல், பின்னலாடை தயாரிப்புக்கு பிரதான மூலப்பொருளான ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு 30 ரூபாய் உயர்ந்துள்ளது.
அண்மைகாலமாகவே பஞ்சு மற்றும் நூலின் விலைக் கடுமையாக உயர்ந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, தமிழக நுாற்பாலைகள், இம்மாதத்துக்கான நுால் விலையை நேற்று வெளியிட்டன. அதன்படி பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் அனைத்து ரக ஒசைரி நுால் விலை, கிலோவுக்கு 30 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
விலை எவ்வளவு?
கோம்டு ரகத்தில், 20ம் நம்பர் நுால் வரி நீங்கலாக, கிலோ 362 ரூபாய்யும், 24ம் நம்பர், 372 ரூபாய்யும், 30ம் நம்பர், ரூ.382யும், 34ம் நம்பர்ரூ.395யும் உயர்ந்துள்ளது. இதேபோல், 40ம் நம்பர், 415 ரூபாய்யும், செமி கோம்டு ரகத்தில், 20ம் நம்பர் நுால் 352 ரூபாய்யும். 24ம் நம்பர், ரூ.362யும், 30ம் நம்பர், ரூ.372யும், 34ம் நம்பர் ரூ.385ம், 40ம் நம்பர், 405 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய நிதியாண்டு பிறந்த நிலையில், பிரதான மூலப்பொருளான நுால் விலை உயர்வு, திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. நுால் கொள்முதலுக்கான செலவு இரட்டிப்பாகியுள்ளதால், ஆடை உற்பத்தி செலவும் அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, வெளிநாடு, வெளிமாநில வர்த்தகர்களிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர்களுக்கு ஆடை தயாரிப்பது மட்டுமல்ல, புதிய ஆர்டர்களை பெறுவதிலும் சிக்கல் உருவாகியுள்ளது.
எனவே மத்திய அரசு, பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்யவேண்டும், யூக வணிகத்திலிருந்து பஞ்சை விடுவிக்கவேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஜவுளித்துறையினரின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் படிக்க...
தொழில் அதிகபராக விருப்பமா? வாய்ப்பு தருகிறது TNAU!
ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!