1. வாழ்வும் நலமும்

கொய்யா இலையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்-Weight loss மேஜிக் பானம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

இயற்கை நமக்கு அளித்தக் கொடைகளில் கொய்யா மிக முக்கியமான ஒன்று.
கொய்யா பழம் மட்டுமல்ல, இலைகளிலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. கொய்யா இலைகளை முறையாக எடுத்துக் கொண்டால் நாம் அளப்பறிய நன்மைகளை அடையலாம்.

இன்றைய வாழ்க்கை முறை, இயற்கையை விட்டு நம்மை வெகுதூரம் அழைத்துவந்துவிட்டது. இதனால், உடல்ரீதியான பலப் பிரச்னையை எதிர்கொள்கிறோம். அவற்றில் பிரதானமான பிரச்னையாக பெரும்பாலானோருக்குத் தற்போது உருவெடுத்திருப்பது உடல் பருமன்.

ஆகவே அனைவரதுத் தேடலும் உடல் எடையைக் குறைப்பதற்கானதாகவே உள்ளது. ஆனால் கொய்யா இலைகளால் இந்த பிரச்சனைக்கு மிகச் சிறந்தத் தீர்வை அளிக்க இயலும்.

ஏனெனில், கொய்யா இலைகளில் இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் சி, பி, கால்சியம், பொட்டாசியம், புரதம் போன்ற பல சத்தான கூறுகள் காணப்படுகின்றன. இது பல பிரச்சனைகளில் இருந்து ஆரோக்கியத்தை காக்கும். அதே சமயம், இதன் இலைகளை உட்கொள்வதன் மூலமும் உடல் பருமன் பிரச்சனையில் இருந்தும் விடுபடலாம். குறிப்பாக. கொய்யா இலை பானம், உடல் பருமன் பிரச்சனைக்குப் பெரும் தீர்வாக அமைகிறது. அதற்கு இந்த மேஜிக் பானம் கட்டாயம் உதவும்.

செய்முறை

  • முதலில் கொய்யா இலைகளை நன்றாகக் கழுவவும்.

  • பிறகு இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைக்கவும்.

  • தண்ணீரை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளவும்.

  • தயாரிக்கப்பட்ட கலவையை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

நன்மைகள்

  • கொய்யா இலைகளை உட்கொள்வது இரைப்பை புண் வராமல் தடுக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • சர்க்கரை நோயாளிகள், கொய்யா இலையைக் கஷாயம் செய்து குடித்து வந்தால், இந்தப் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.

  • கொய்யா இலைகள் கொலஸ்ட்ராலைக் குறைக்க பெரிதும் பயன்படும்.

  • செரிமானத்தை மேம்படுத்த , கொய்யா இலைகளை உட்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.

  • ஒவ்வாமை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த கொய்யா இலைகள் அரிப்பு அல்லது ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

  • இருப்பினும், காய்ந்துபோனக், காலாவதியான கொய்யா இலைகளை சாப்பிடக்கூடாது. இது நன்மைக்கும் பதிலாக, ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க...

தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!

ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

English Summary: Benefits of Guava Leaf Shedding-Weight Loss Magic Drink!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.