ஒரு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகளால் பயன்படுத்தப்படும் பயிர் காப்பீட்டு செயலியில் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி 2016 ஆம் ஆண்டில் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY-PM Fasal Bima Yojana) ஐ அறிமுகப்படுத்தியபோது, கணிக்க முடியாத பருவமழை, வறட்சி மற்றும் பிற தடுக்க முடியாத அபாயங்களை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு இது ஒரு நிரந்தர தோழனாக செயல்படும் என வர்ணிக்கப்பட்டது.
பயிர் காப்பீட்டு செயலி:
வறட்சி, வெள்ளம், பூச்சி அல்லது நோய் தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக காப்பீட்டு திட்டம் நடைமுறையில் உள்ளது. பயிர் இழப்புக்கான காப்பீட்டுத்தொகை உரிமை கோரல்களைத் தாக்கல் செய்வதற்கு வசதியாக “பயிர் காப்பீட்டு செயலி” 2018-ல் தொடங்கப்பட்டது.
மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட ஆண்ட்ராய்டு ஃபோன்களின் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்தச் செயலி, விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது காப்பீட்டுக் கோரிக்கையைச் சமர்ப்பிக்க விவசாயிகள் முயன்ற போது செயலி ஒழுங்காக செயல்படாததால், தங்களால் காப்பீடு கோர முடியவில்லை என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளின் விரக்தியை ப்ளே ஸ்டோரில் உள்ள செயலியின் மதிப்புரைகள் பிரிவில் பார்த்தாலே தெரியும். பயிர் காப்பீட்டு செயலியில் பல தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதால், விவசாயிகளால் பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய இயலவில்லை எனவும் இதனால் உரிய வகையில் காப்பீட்டுத் தொகையை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்ப கோளாறு:
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனது ரூ.2 லட்சம் காப்பீட்டுக்கான கோரிக்கையை செயலியில் பதிவு செய்ய முயன்றதை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். செயலியானது அவரது படிவத்தை சமர்ப்பிக்க அனுமதிக்கவில்லை.
இதே போல், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றொரு விவசாயி, நெல் இழப்பு குறித்து தனது கோரிக்கையை பதிவு செய்ய முயன்றார். ஆனால் இயலவில்லை, இதனால் விரக்தியடைந்த விவசாயி தெரிவிக்கையில் “மோசமான பயன்பாடு. எனது நெல்லின் இழப்பைப் புகாரளிக்க முயற்சிக்கிறேன், ஆனால் செயல்முறை முடிவடையவில்லை. இந்த செயலியைப் பயன்படுத்தி எங்களால் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்ற முடியாது எனத் தெரிவித்து உள்ளார்.
மற்றொரு விவசாயி ”பக்வாஸ் ஆப். கடந்த 15-ந்தேதி முதல் பயிர் இழப்பை சமர்பிக்க முயற்சித்தும், முடியவில்லை,” என்று குறிப்பிட்டுள்ளார். இவர்களைப் போலவே, சமூக ஊடகங்களிலும் செயலியின் செயல்பாடு குறித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
PMFBY இன் கீழ், பயிர் சேதம் குறித்து 72 மணி நேரத்திற்குள் காப்பீட்டு நிறுவனங்களை அழைக்க வேண்டிய பொறுப்பு காப்பீடு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு உள்ளது, இல்லையெனில் பயிர் காப்பீட்டின் பலனைப் பெறுவதற்கான வாய்ப்பை அவர்கள் இழக்க நேரிடும்.
கிடைத்துள்ள தகவலின் படி ஹரியானாவில் 24,000-க்கும் அதிகமான விவசாயிகள் மூன்று வருடங்களாக பயிர்க் காப்பீட்டு தொகையினை பெற காத்திருக்கின்றன. இதன் மதிப்பு சுமார் ரூ. 54 கோடி ஆகும். விவசாயிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யுமாறு கோரிக்கை விடுக்கபட்டுள்ளது.
pic courtesy: PMFBY website
மேலும் காண்க:
இந்த மாவட்டங்களில் இன்று கனமழை- புயல் உருவாகும் தேதி கணிப்பு