1. செய்திகள்

இன்சூரன்ஸ் கூட பண்ணலயே.. நிவாரணம் கோரும் வாழை விவசாயிகள்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Thousands of bananas damaged by cyclone in Coimbatore and Salem districts

கோவை மற்றும் சேலம் மாவட்டத்தில் சூறைக்காற்றால் வாழைத்தோட்டத்தில் ஏற்பட்ட சேதத்தை வருவாய்த் துறையினர் மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதத்தின் மதிப்பினை கணக்கிடும் பணி முழுமையாக நிறைவடைந்ததும் இது தொடர்பாக ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என தாசில்தார் குறிப்பிட்டுள்ளார்.

அன்னூர் தொகுதிக்கு உட்பட்ட போகலூர், அழகப்ப கவுண்டன்புதூர், கஞ்சநாயக்கன்பாளையம், கோபி ராசிபுரம், ஒட்டர்பாளையம், குப்பனூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை வீசிய சூறைக்காற்றால் சுமார் 30 ஆயிரம் வாழைத்தோட்டங்கள் வேரோடு சாய்ந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான விவசாயிகள் பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்யாததால், பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.  எனவே உரிய நிவாரணம் வழங்குமாறு மாநில அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அழகப்பகவுண்டன்புதூரைச் சேர்ந்த விவசாயி பி.பழனிசாமி கூறுகையில், "எனது இரண்டு ஏக்கர் நிலத்தில் உள்ள பெரும்பாலான வாழைகள் சூறைக்காற்றில் அழிந்துவிட்டன. தற்போது, சேதமடைந்த பயிர்களில் இருந்து எடுக்கப்பட்ட முதிர்ச்சியடையாத வாழைக் குலைகள், 200 ரூபாய்க்கும் குறைவாக விற்கப்பட்டன. சாதாரணமாக அதன் விலை ரூ 450-600 வரை போகும். தற்போது உற்பத்தி செலவில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை” என வேதனை தெரிவித்தார்.

மற்றொரு விவசாயி எஸ்.வேலுசாமி கூறுகையில், "இதுவரை இடுபொருள் செலவாக ஏக்கருக்கு ரூ.1.40 லட்சம் செலவு செய்துள்ளேன். ஆனால் தற்போது செடிகள் அனைத்தும் வேரோடு சாய்ந்து பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.

சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சுமார் 42,800 வாழைத்தோட்டங்கள் சேதமடைந்துள்ளன.

சேலம், ஆத்தூர் அருகே கீரிப்பட்டி கிராம ஊராட்சியில் விவசாய நிலங்களில் 20 ஹெக்டேர் வாழை பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சேலம் கலெக்டர் எஸ்.கார்மேகம் மற்றும் தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக திங்கள்கிழமைக்குள் சேதம் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கீரிப்பட்டியில் மட்டும் நேற்று மாலை வரை மொத்தம் 18,000 சேதமடைந்த வாழை மரங்கள் எண்ணப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 35,000 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது '' என தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் ஈரோடு, பெருந்துறை அருகே தோரணவாவி கிராம ஊராட்சியில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழை பயிர்கள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

"இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள, 70 ஏக்கர் வாழைப் பயிர்களில், 15 ஏக்கரில் பயிர்கள் சேதமடைந்துள்ளன. மொத்தம், 23.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 7,800 வாழை பயிர்கள் சேதமடைந்திருக்க வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட வாழை பயிர்கள் குறித்த முறையான கணக்கெடுப்பு தற்போது நடந்து வருகிறது. விரைவில் கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும், அதன்பின், விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படும்,'' என தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காண்க:

உழவன் செயலியில் இந்த தகவல் எல்லாம் இல்லையே.. புலம்பும் விவசாயிகள்

English Summary: Thousands of bananas damaged by cyclone in Coimbatore and Salem districts Published on: 24 April 2023, 04:20 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.