Farm Info

Sunday, 20 February 2022 09:28 PM , by: Elavarse Sivakumar

ரேஷன் கடைகளில் நிதிச் சேவை வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவு மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இனி விவசாயிகளுக்கான சேவைகள் அனைத்தையும் ரேஷன் கடைகள் மூலமே செய்துகொள்ள முடியும். ரேஷன் கடைகள் மூலம் நிதிச் சேவைகளை பொதுமக்களுக்கு வழங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் நிதிச் சேவைகள் எளிமையாக பெறுவது மட்டுமல்லாமல், ஏஜெண்டுகளாகவும் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும்.

நாடு முழுவதும் தற்போது சுமார் 3 லட்சம் பொதுச் சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் ஆதார், பான் கார்டு, ரயில் டிக்கெட், அரசு திட்டங்கள் உள்பட ஏராளமான சேவைகளை எளிதில் பெற முடிகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் பொது சேவை மையங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 6 லட்சம் கிராமங்களுக்கு பொது சேவை மையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுள்ளது.

சுமார் 8000 பொது சேவை மையங்கள், ஏற்கனவே ரேஷன் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, வரும் நாட்களில் 10000 கூடுதல் பொது சேவை மையங்களை ரேஷன் கடைகளுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஷன் கடைகளிலேயே பொது மக்களால் நிதிச் சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதன் மூலம் கிராமப்புற மக்களும் ரேஷன் கடைகள் மூலமாகவே ஆதார், பான் கார்டு, வங்கி சேவைகள், அரசு திட்டங்கள், விவசாயிகளுக்கான சேவைகள், ஓய்வூதியம், பில் கட்டணம், காப்பீடு, டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க...

இதைச் செய்யாவிட்டால் உங்கள் PAN Card முடக்கப்படும்!

பணம் தங்குதடையின்றி வரவேண்டுமா? இந்தச் செய்தால் போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)