பயிர்களின் தேவை அறிந்து, விவசாயிகள் தான் அவற்றுக்கு என்ன தேவை என்று பார்த்துப் பார்த்துத் செய்கிறார்கள். இந்த நிலையை 'இன்னர் பிளான்ட் தொழில்நுட்பம் (Inner Plant Technology)' விரைவில் மாற்றத்தைக் கொண்டு வரவிருக்கிறது. இதன் மூலம், பயிர்களுக்கு தண்ணீர், உரம் (Compost) என எது தேவையென்றாலும் தானாகவே ஒளிரும் தன்மையை இந்த தொழில்நுட்பம் உருவாக்கும்.
பயிர்கள் ஒளிரும்
பயிர்களுக்கு நீர் போதவில்லை, பூச்சி தொந்தரவு அதிகரித்து விட்டது என்றால், அவை 'ஒளிர்வதன்' (Brightness) மூலம் விவசாயிக்கு, தங்கள் வேதனையை விவசாயிகளுக்குத் தெரிவிக்க முடியும். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த இன்னர் பிளான்ட் (Inner Plant) நிலையத்தின் விஞ்ஞானிகள், இந்த புதுமையை உருவாக்கியுள்ளனர்.
முதலில், தக்காளிச் செடியை (Tomato plant) இந்த வகையில் உருவாக்கி, விளைவித்து வெற்றி கண்டுள்ளனர். அடுத்து சோயா பயிர்களுக்கும் ஒளிரும் தன்மையை தர ஆய்வுகள் நடந்து வருகின்றன. நீர் போதாமை, பூச்சி தாக்குதல், சத்து பற்றாக்குறை போன்ற மூன்று நிலைகளை தெரிவிக்க, மூன்று வகையில் இன்னர் பிளான்டின் பயிர்கள் ஒளிரும் என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சிறப்பு கேமரா
பயிர்கள் ஒளிர்வதை, சிறப்பு கேமரா மூலம், செயற்கைக்கோளிலிருந்தே (Satellite) படம் பிடிக்க முடியும். எனவே, பல்லாயிரம் ஏக்கர் பரப்பில் விளைவிக்கப்படும் பயிர்களுக்கே ஒளிரும் தொழில்நுட்பம் பயன்படும். இப்போதே, ஜப்பானிய முதலீட்டாளர்கள், சோயாவை (Soya) ஒளிர வைக்கும் நுட்பத்தில் ஆர்வம் காட்டியுள்ளதாக, இன்னர் பிளான்ட் அதிகாரிக்கள் தெரிவித்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
விவசாய சட்டங்கள் பற்றிய அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது நிபுணர் குழு!
கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!