1. செய்திகள்

கோரை சாகுபடி தீவிரம்! விவசாயிகள் வாழ்வாதாரத்தை காக்க கோரைப்பாயை பயன்படுத்துவோம்!

KJ Staff
KJ Staff
Reed Cultivation

Credit : Daily Thandhi

பொறையாறு, செம்பனார்கோவில் அருகே கோரைப்புல் அறுவடை (Reed harvest) பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சாகுபடியை விரிவாக்கம் செய்ய வேளாண்மை துறை உதவிகள் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரைபுல் சாகுபடி

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பகுதியில், விவசாய தொழிலும், அதற்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. தற்போது விவசாயிகள் கரும்பு, உளுந்து, பாசிப்பயறு, வாழை, மக்காச்சோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு, கத்தரிக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பாகற்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளையும் சாகுபடி (Cultivation) செய்து வருகின்றனர். இந்தநிலையில் செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டம், காலகஸ்திநாதபுரம், திருவிடைக்கழி, விசலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கோரைபுல் சாகுபடி (Reed harvest) செய்திருந்தனர். கோரைப்புல் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. எனவே தற்போது கோரைப்புல் அறுவடைப் பணியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

அறுவடைப் பணி

செம்பனார் கோவில் வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் பாய் தயாரிக்க கோரை புல் சாகுபடி செய்து இருந்தோம். தொடர்ந்து ஏற்பட்ட பருவமழை காரணமாக சற்று காலதாமதமாக கோரைப்புல் நடவு (Reed planting) செய்தோம். தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. இப்போது அறுவடை பணியை செய்து வருகிறோம். இந்த கோரைபுல் பாய் தயாரிக்க வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆரணி உள்ளிட்ட வெளிமாவட்ட பகுதியை சேர்ந்த வியாபாரிகள் அறுவடை செய்யும் இடத்திற்கு நேரடியாக வந்து கோரை புல்லை கொள்முதல் செய்து செல்கின்றனர். கோரைப்புல் பாய் மனிதர்களின் உடல் உஷ்ணத்தில் இருந்து பாதுகாக்கிறது. மனிதர்களுக்கு பலவித நன்மைகள் ஏற்படுகிறது. நோய் நொடியில் இருந்து பாதுகாக்கிறது என்று விவசாயிகள் கூறினார்கள்.

நஷ்டம் ஏற்படுகிறது

கோரைக்கிழங்கு மருத்துவ குணம் கொண்டது. காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு இந்த கிழங்கை பயன்படுத்துவர். சிறியோர் முதல் பெரியோர் வரை நம் முன்னோர்கள் காட்டிய வழியில் அனைத்து பொதுமக்களும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த, கோரைப்பாயை பயன்படுத்தினால் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். தற்போது பொதுமக்கள் பிளாஸ்டிக் வயர் பாய்யை நாடி செல்கின்றனர். இதன் காரணமாக வியாபாரிகள் கோரை புல்லை குறைந்த விலைக்கு கேட்கின்றனர். விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. அரசு கோரை புல் சாகுபடியை விவசாயிகள் விரிவாக்கம் செய்ய, வேளாண்மை துறை மூலம் உதவிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாய சட்டங்கள் பற்றிய அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது நிபுணர் குழு!

மா விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை! நிவாரணம் வழங்க கோரிக்கை!

English Summary: Intensity of reed cultivation! Let's use the reed to protect the livelihood of the farmers!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.