Farm Info

Tuesday, 26 July 2022 08:14 PM , by: Elavarse Sivakumar

விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி, மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் போட்டி ஆகியவை  நடத்தப்பட உள்ளது. இதில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசும், பதக்கமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருந்திய நெல் சாகுபடி

இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர் விளைச்சல் போட்டியானது நெற்பயிரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மாநில அளவில் நடத்தப்படுகிறது.
இந்த போட்டியில் கூடுதல் விளைச்சல் பெறும் விவசாயி ஒருவருக்கு ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான பதக்கமும் நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

ரூ.150 கட்டணம்

இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி நுழைவு கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். இதுதவிர, தங்களது சாகுபடி நில விவரங்கள் சிட்டா அடங்கல் போன்ற ஆவணங்களை அளித்து பதிவு செய்து கொள்ளவும்.

ரொக்கப் பரிசு

மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் மணிலா மற்றும் உளுந்து பயிரிடும் விவசாயிகளுக்காக நடைபெறவுள்ளது. மணிலா பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரமும் வழங்கப்படும். உளுந்து பயிரில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி உரிய ஆவணங்களுடன் ரூ.100 நுழைவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்.

பதிவு அவசியம்

செங்கல்பட்டு மாவட்ட அளவில் மணிலா பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கான பயிர் விளைச்சல் போட்டியில் கலந்துகெண்டு விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் ரூ.50 நுழைவுக்கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

கூடுதல் மகசூல்

இந்தப் போட்டியில் கூடுதல் மகசூல் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும். மேற்கண்ட மாநில, மாவட்ட அளவிலான போட்டிகளில் குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மைத்துறை அலுவலர்களை அணுகி பயன் பெறுங்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை- TNPSC அறிவிப்பு!

இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)