இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 12 July, 2021 2:40 PM IST
Cucumber Farming

இரகங்கள்:

ஜப்பானி லாங் கிரின், கோ.1, ஸ்ரோயிட் எய்ட், பாயின்செட்டி ஆகியவை சிறந்த இரகங்களாகும்.

மண்:

இதைக் களிமண், வண்டல் மண் வரை அனைத்து வகையான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். மிதமான வெப்பமும், காற்றில் அதிக ஈரப்பதமும் இதன் வளர்ச்சிக்கு சிறந்தது. சிறந்த மகசூலுக்கு கார அமிலத்தன்மை 6.5-7.5 இருக்க வேண்டும்.

பருவம்:

கோடைக்காலத்தில், பிப்ரவரி - மார்ச் மாதங்களிலும் மழைக்காலத்தில் ஜூலை மாதங்களிலும் பயிரிடலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது, 60 செ.மீ அகலத்தில் 1.50 மீட்டர் இடைவெளியில் வாய்க்கால் அமைத்து, வாய்க்கால்களில் 45 செ.மீ நீளம், ஆழமுடைய குழிகள் எடுக்கவேண்டும். பின்பு குழிகளில் மண்ணுடன் 10 கிலோ நன்கு மக்கிய தொழு எரு, கலப்பு உரம் 100 கிராம் மற்றும் இட்டு நீர்ப் பாயச்சவேண்டும்.

விதையும் விதைப்பும்

ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதை-ஒரு கிலோ விதைக்கு, டைக்கோடெர்மா விரிடி 4 கிராம், சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் கிலோ விதை இரண்டு கிராம் கேப்டன் அல்லது திராம் மருந்து கலந்து நேர்த்தி செய்து, குழிக்கு 4-5 விதைகள் விதைத்து, நன்கு முறைக்கும் வரை நீர் பாய்ச்ச வேண்டும்.

செடி பராமரித்தல்

விதைகள் நன்கு முளைத்த பின், நன்கு வளரும் செடிகள் 2-3 வைத்துக் கொண்டு, மீதிச் செடிகளைக் களைந்து விட வேண்டும்.

நீர் நிர்வாகம்

விதைகள் விதைத்த மூன்றாம் நாளில் தண்ணீர் விட வேண்டும். நன்கு முளைத்தவுடன் ஒரு முறை தண்ணீரும், அதற்கு அடுத்த வாரத்தில் ஒரு முறையும் வாய்க்கால்களின் வழியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

விதைத்த 20-25 ஆம் நாளும் ஒரு மாத இடைவெளியிலும் களை கட்டாயம் எடுக்கவேண்டும்.

விதைத்த 30 ஆம் நாளில் செடிகளை கொத்திவிட்டு மேல் உரமாக 50 கிராம் யூரியாவை ஒவ்வொரு குழிக்கும் அளிக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பழ ஈக்கள் மற்றும் வண்டுகளின் தாக்குதலைக் கட்டுப்படுத்த மாலத்தியான் மருந்தை ஒரு லிட்டர் நீரில் இரண்டு மில்லி என்ற அளவில் தெளிக்கவேண்டும்.

அறுவடை

விதைத்த 45 நாட்கள் கழித்து காய்களை அறுவடை செய்யலாம். மொத்தம் 8 முதல் 10 முறை அறுவடை செய்யலாம்.

மகசூல் 

எக்டருக்கு 90 நாட்களில் 8 முதல் 10 டன்கள் வரை பிஞ்சுக் காய்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க:

காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

காய்கறி பயிர்களில் எப்போது அறுவடை செய்தால் தரமான விதைகள் கிடைக்கும்?

English Summary: Cucumber Cultivation in July: Full Details.
Published on: 12 July 2021, 02:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now