1. செய்திகள்

காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு!

KJ Staff
KJ Staff
vegetable garden

Credit : Daily Thandhi

திண்டிவனத்தில் காய்கறி தோட்டங்கள் (Vegetable garden) அமைப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சத்தான காய்கறிகளை வீட்டுத் தோட்டத்தில் விதைத்து, நலம் பெற அதன் அருமையை அனைவரும் உணர வேண்டும் என்று விழிப்புணர்வு நடத்தப்பட்டது. திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் (Agricultural Science Center) சமச்சீர் வளர்ச்சி நிதி உதவியுடன் செயல்படும் ஊட்டச்சத்து காய்கறிகளை மாணவர்களிடையே பிரபலப்படுத்தும் திட்ட தொடக்க விழா மற்றும் ஊட்டச்சத்து காய்கறி தோட்டங்கள் அமைப்பது குறித்த விழிப்புணர்வு (Awareness) நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை (Annadurai) தலைமை தாங்கினார். அறிவியல்நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் சீனி அன்புமணி வரவேற்றார்.

மாணவர்களுக்கு விழிப்புணர்வு

மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத்தலைவர் பொன்னையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு காய்கறித் தோட்டம் அமைக்கும் விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு கையேடு (Awareness Guide) ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு, விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. விவசாயிகளுக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி (CM Palanisamy) பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நாம் விவசாயத்தில் புரட்சி காண வேண்டும். விவசாயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விவசாயத்துறைக்கு அரசு அதிக நிதி ஒதுக்கீடு (Allocation of funds) செய்துள்ளது. இதை ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், சரியாக பயன்படுத்தி, விவசாயிகளின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். தமிழகத்தில் எதிர்காலத்தில் விவசாயத்துறை நல்ல வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்றார்.
நிகழ்ச்சியில், மாநில வளர்ச்சி கொள்கை குழுவின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு துறை குழும தலைவர் ஜெகன்மோகன், திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் ஸ்ரீதர், வேளாண்மை இணை இயக்குனர் ரமணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா ஆகியோர் பேசினர். முடிவில் தோட்டக்கலை (Horticulture) உதவி பேராசிரியர் நீலாவதி நன்றி கூறினார்.

நல்ல முயற்சி:

வருங்கால இளைய சமுதாயத்திற்கு விவசாயம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்முயற்சியாகும். இந்த விழிப்புணர்வால், விவசாயம் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு அதிகரிக்கும். வீட்டுத் தோட்டத்தில் இப்போதிருந்தே காய்கறிகளை விதைக்க ஆரம்பித்து விட்டால், நாட்கள் செல்ல செல்ல, விவசாயம் பற்றி நன்றாக அறிந்து கொள்வார்கள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி! இன்று முதல் பயன்பாட்டிற்கு வரும் நெல் கொள்முதல் நிலையங்கள்!

நகைகளை வைத்து விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனும் தள்ளுபடி! அமைச்சர் செல்லூர் ராஜூ

English Summary: Awareness for students about setting up vegetable gardens!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.