பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் ரபி பருவம் 2022-23ல் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் நடப்பு ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனத்தில் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.885 பிரிமியம் செலுத்திட கடைசி நாள்: 28.02.2023க்கு முன் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து கால நிலை மாற்றங்களால் ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்க வேண்டும்.
2. 5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவியில் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்
5000 விவசாயிகளுக்கு ரூ.10000/- மானிய உதவி வழங்க ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் "மானியத்துடன் மின்சார மோட்டார் பம்ப்-செட்டுகள்" திட்டம் செயல்படுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மோட்டார் பம்ப்செட்களை வாங்குவதற்கு அல்லது பழைய திறனற்ற மின்சார மோட்டார் பம்ப்செட்களை மாற்றுவதற்கு - ஆணைகள் வெளியிடப்பட்டது. இதனை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை - அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் அவர்கள் செய்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
3.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் முதல் 14 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்றும் நீடித்தது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 10ஆயிரத்து 511 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 11 ஆயிரத்து 51 கனஅடியாக அதிகரித்துள்ளது.
4. கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை சரிவு
கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நேற்று காலை 750 வாகனங்களில் 7,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன, இது வரத்தை விட 1000 டன் அதிகமாகும். இதனால் அனைத்து காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 30ல் இருந்து 10க்கும், பெரிய வெங்காயம் ரூ.40ல் இருந்து 25க்கும், சின்ன வெங்காயம் ரூ.120ல் இருந்து ரூ.80க்கும், கத்திரிக்காய் ரூ.35ல் இருந்து 10க்கும், கேரட் ரூ.80ல் இருந்து 35க்கும், பச்சைமிளகாய் ரூ45ல் இருந்து ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட்டது.
5.கரும்புகள் ஆரைக்க, வரிசையில் காத்திருக்கும் டிராக்டர்கள்
கரும்பு அரவை சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து கராட் பகுதியில் உள்ள சக்யாத்ரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைப்பதற்காக ஏராளமான டிராக்டர்களில் கரும்புகள் ஏற்றி வரப்பட்டு ஆலை முன் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
மேலும் படிக்க: விளைபொருட்களை அடகு வைத்து ரூ. 75 லட்சம் வரை கடன் பெறலாம்
6. கல்விக் கடன் வழங்கும் முகாம் வருகிற நவம்பர் 29 ஏற்பாடு
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திணடுக்கல் மாவட்ட முன்னோடி வங்கி அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் ஆகியவை இணைந்து நடத்தும் கல்விக் கடன் வழங்கும் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.விசாகன், அவர்கள் தலைமையில் திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரியில் வரும் நவம்பர் 29 அன்று காலை 10 மணி முதல் மதியம் 01: 30 மணி வரை நடைபெறவுள்ளது.
7. முந்திரி விளைச்சலில் அசத்தும் பழங்குடியினர்
அரியலூர் மாவட்டம் குவாகம் கிராமத்தில் அரசின் 7 ஏக்கர் முந்திரி காட்டை இருளர் பழங்குடியினருக்கு கடனுதவியுடன் குத்தகைக்கு அளித்த மாவட்ட நிர்வாகம்; 10 மாதங்கள் 80 பேர் பாடுபட்டு, முதல் அறுவடையில் 95 மூட்டைரகள் முந்திரி விளைவித்து, செலவுகள் போக ரூ.3.50 லட்சம் லாபமாக ஈட்டியுள்ளனர். எலி, பாம்பு பிடிப்பது, செங்கல் சூளை வேலை மட்டுமே செய்து வந்த தங்களை முந்திரி விவசாயிகளாக மாற்றியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளனர் அப்பகுதி பழங்குடியினர்.
8. பனை விதை முதல் பனை ஏற உதவும் கருவிகள் வரை மானியம் அறிவிப்பு
தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை, பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23 அன்று பனை விதை விநியோகம் செய்யப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு விவசாயிக்கும், அதிகபட்சமாக 50 விதைகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். பனை ஏறும் விவசாயிகளுக்கு பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் வழங்குதல், ஒரு அலகிற்கு 75 சதவீதம் மானியமாக ரூ.4,500 /- வழங்கப்படும்.
9. சீசனுக்கு முன்பாகவே கர்நாடகா மாம்பழம் வாஷி சந்தைக்கு வருகை
கர்நாடகா மாம்பழம் வாஷி, சீசனுக்கு முன்னதாகவே சந்தைக்கு வந்துள்ளது. இது குறித்து வாஷி ஏபிஎம்சி சந்தையை சேர்ந்த வியாபாரிகள் கூறுகையில், தேவ் காட், மாலவி, அல்போன்சா மாம்பழங்கள் ஏற்கனவே சந்தைக்கு வந்தன. இதை தொடர்ந்து கர்நாடகா மாம்பழங்களும் வரத்துவங்கியுள்ளது. கர்நாடகா மாம்பழங்கள் கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் துவங்கும்போதே மக்கள் காத்திருந்து வாங்கிச் செல்கின்றனர். இந்த ஆண்டு சீசனுக்கு முன்பாகவே மாம்பழம் வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10. வானிலை தகவல்
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் திசம்பர் 1ந் தேதி வரை தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
மேலும் படிக்க:
விளைபொருட்கள் அடகு வைத்து ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம்| இயந்திர வாடகை மையம் நிறுவ 80% மானியம்
வாடகை மையம் நிறுவ ரூ.60 லட்சம் மானியம்| மழை, வெள்ளம் குறித்து புகார் இதோ Whatsapp No.| செய்திகள்